Header image alt text

தனி ஈழம் சாத்தியமற்றது!- தர்மலிங்கம் சித்தார்த்தன்-

Sithar ploteதர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் ‘புளொட்’ இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார்.

இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!. Read more

இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாண விஜயம்-

anurathapuram_01modi_milkஇலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். பின்னர் யாழ் நூலகத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இங்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர், இலங்கைக்கும் இந்தியாவுக்கு பௌதீகமான தொடர்புகள் மட்டுமின்றி, கலாச்சாசர ரீதியான விடயங்களில் ஒன்றுப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள். யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி. யாழில் நிர்மாணித்து கொடுக்கப்படும் கலாச்சார நிலையம் மிகவும் புரதன நுட்பம் வாய்ந்த கலாச்சார விடயங்களை அடையாளப்படுத்த போகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் உலகத்தின் மிகப் பெரிய நூலகமாக இருந்துடன் அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன. பின்னாளில் அது எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட புத்தங்களை நாங்கள் வழங்குவோம். மிகவும் பிரசித்தமான மற்றும் முக்கியமான புத்தகங்களை வழங்குவோம். நூலகம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம். எடுத்துக்கொண்ட பணிகளை எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி செய்துமுடிப்போம். யாழில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் அமையும். தலைமன்னார் ரயில் பாதையை திறந்து வைத்து, கலாச்சார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவது, வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைப்பது என்பன திரிவேணி சங்கம் போன்றது என கருதுகிறேன் என்றார்.

ஆலயங்களை காணவில்லையென மக்கள் தெரிவிப்பு-

aalayankalai kaanavillai (1) aalayankalai kaanavillai (2)வளலாய் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் என 10க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக தங்கள் காணிகளை பார்வையிடச் சென்ற மக்கள் தெரிவித்துள்ளனர். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே-284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை நேற்று அங்கு சென்று அடையாளப்படுத்தினர். இதன்போதே அந்த மக்கள் இவ்வாறு கவலை வெளியிட்டனர். அவர்கள் கூறுகையில், எமது கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பல வீடுகள் ஆகியவற்றை இடித்தழித்த இராணுவத்தினர், அந்நிலங்களில் விவசாய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பிரசித்தி பெற்ற இந்து ஆலயமான தேனார்ஓடை பிள்ளையார் கோவில் இடித்து அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கோயிலின் தேர் மற்றும் வாகனங்கள் என்பவற்றுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. அத்துடன் மேலும் சில இந்து ஆலயங்களும் இடித்து அழிக்கப்பட்டுள்ளன. இடித்து அழிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் விக்கிரகங்களின் சிலவற்றை, பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இராணுவத்தினர் கொண்டுசென்று வைத்துள்ளனர். பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயமான லூதர் மாதா தேவாலயமும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழில் இருந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் ஒன்றான ‘பாம் பீச்’ எனப்படும் ஹோட்டல் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் போராட்டம்-

kavana eerppu jaffna (1) kavana eerppu jaffna (3)யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னேடுக்கப்பட்டது. யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றுகாலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணிவரையில் இவ்வாறு போராட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரியிடம் இந்திய பிரதமருக்கு கையளிக்க கோரி மகஜர் ஒன்றினையும் வழங்கியுள்ளனர். போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் குடியமர்த்தல், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பூரணமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தல், மீள்குடியேற்ற மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை எட்டரை இலட்சமாக வழங்குதல், இந்திய – இலங்கை மீனவர்களது பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல், வளங்களை அழிக்கும் தொழில் முறையைத் தடை செய்தல், இழுவைப்படகால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், சரணடைந்தவர்களை மீள ஒப்படைத்தல், காணாமற்போனவர்கள் தொடர்பில் தகுந்த பதில் வழங்குதல், போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு 13 வருட சிறைத்தண்டனை-

maldive former presidentபயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது நஷீட்டின் ஆட்சிகாலத்தில் 2012 ஆம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர் குழாம் நேற்று தீர்ப்பளித்துள்ளது மொஹமட் நஷீட்டின் கைது அரசியல் நோக்குடையது என அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான உரிமை நஷீட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும், அரச தரப்பு சாட்சிகள், பொலிஸார் மற்றும் நீதிபதிகளால் பயிற்சியளிக்கப்பட்டுள்ள சாட்சிகள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி யாமின் அப்துல் கையூமை எதிர்த்துப் போட்டியிட மொஹமட் நஷீட் தீர்மானித்திருந்தார்.

இந்தியப் பிரதமர் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பித்து வைப்பு-

rail service (2)இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்து, மன்னார்- தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்றுகாலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதற்கமைய தலைமன்னார் பியர் பகுதிக்கு இந்திய விமானப்படையினரின் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைத்ததுடன் மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார். தலைமன்னாரில் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்ததாக கூறப்படுகின்றது.

பகீரதிக்கு பிணை வழங்கப்பட்டது-

baheerathi releasedகே.பி. என்கிற குமரன் பத்மநாதனின் நிதி உதவியாளரும் நெருங்கிய உதவியாளருமான சுப்பிரமணியம் ஜெயகணேஷின் மனைவி 2லட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணை மற்றும் இரண்டு ஆட்பிணையிலும் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகலவினால் நேற்று விடுவிக்கப்பட்டார். சந்தேகநபரான பகீரதி முருகேசு தனது 8வயது மகளுடன் பிரான்ஸ் செல்வதற்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்த போது மார்ச் 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். அவர் அன்றே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவர் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவர் எனவும் யுத்தம் முடியும் வரை கடற்புலியாக செயற்பட்டார் எனவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தமது அறிக்கையில் கூறியிருந்தனர். இந்தப்பெண், புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகளின் ஆயுத கொள்வனவாளர் குமரன் பத்மநாதன் ஆகியோரிடம் நெருக்கமாக இருந்த சுப்பிரமணியம் ஜெய்கணேஷ் என்பவரை திருமணம் செய்து பிரான்ஸ{க்கு குடிபெயர்ந்ததாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர் புலிகள் இயக்கத்தை சர்வதேச அளவில் மீள்கட்டமைக்க முயன்றவர் எனவும் சட்டமா அதிபர் இவர்மீது மேல்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர விரும்பியுள்ளார் எனவும் கூறினர். ஆயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய அவருக்கு பிணை வழங்குவதை எதிர்க்கவில்லை சந்தேக நபரை புலிகள் இயக்கத்தவர் என பொலிஸார் கூறியபோதும் அதற்கு ஆதாரம் இல்லையென சிரேஷ்ட வழக்குரைஞர் கே.வி. தவராசா கூறினார். டீஅறிக்கை அறிவிக்காமல் அவரை விடுவிக்கும்படி கூறப்பட்டுள்ளதென்பதால் அவரை விடுதலை செய்யுமாறு அவர் கூறினார். இவரை பிணையில் விடுவித்த நீதவான் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பொலிஸில் கையொப்பமிடுமாறும் அவருக்கு பணிக்கப்பட்டுள்ளது. வழக்கு மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கதிர்காமம் ஆலயத்தை அரசியல் அழுத்தங்கள் அற்ற இடமாக மாற்ற உத்தரவு-

கதிர்காமம் ஆலயத்தை அரசியல் அழுத்தங்களற்ற இடமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தசாசன அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். பஸ்நாயக்க நிலமே ஒருவரை நியமிக்கும்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக, உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக இருப்பது தகுதியற்றது என பௌத்த விகாரை கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், கடந்த அரசாங்கம் அதனை இரத்துச் செய்திருந்தது. பஸ்நாயக்க நிலமேயின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்ற போதிலும், அதனை மேலும் இரண்டு வருடங்களாக நீடிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அதனை அதிகாரமற்றதாக மாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.