மலையகத் தலைவர்களை டில்லி வருமாறு – மோடி அழைப்பு
இலங்கைகான இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடி கொழும்பு மற்றும் வடபகுதிக்கு மட்டுமே சென்றிருந்தார். நாட்டின் கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு அவர் வராதது வருத்தமும், ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளன என்று அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இந்தியா புறப்படும் முன்னர் மலையகப் பகுதித் தலைவர்களை நரேந்திர மோடி சந்தித்தார். மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அப்பகுதி தலைவர்களை டில்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது மலையகப் பகுதி தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகள் தன்னிடம் போதியமான அளவில் இல்லை என்றும், அவற்றை சேகரிக்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தங்களிடம் தெரிவித்தார் என அவரைச் சந்தித்த குழுவில் இருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் இந்தியப் பிரதமர் சூசகமாக தங்களிடம் தெரிவித்ததாகக் கூறும் அவர், மலையகப் பகுதியில் 20,000 வீடுகளைக் கட்டித்தர இந்தியப் பிரதமர் உறுதியளித்ததாகவும்.
போதுமான நேரமின்மை மற்றும் பயண ஒழுங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் காரணமாகவே தன்னால் மலையகப் பகுதிக்கு வரமுடியவில்லை என்றும் ஆனாலும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களின் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதையும் அவர் தங்களிடம் கூறியதாகவும் அவர் மேலும் கூறினார்.
லாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதில் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானிய தாலிபான்களின் ஒரு கிளை அமைப்பான ஜமாத்துல் அஹ்ரர் எனும் அமைப்தே இத்தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மிகப் பெரும்பான்மையாக முஸ்லிம்களே வாழ்ந்துவரும் சூழலில் அங்குள்ள கிறிஸ்தவர்கள் நாட்டின் மக்கட்தொகையில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான அளவே உள்ளனர்.
கன்னியாஸ்திரி மீது பாலியல் வல்லுறவு: பொலிசார் கைது நடவடிக்கைகள்
நொதியா மாவட்டத்தில் அமைந்துள்ள ரானாகட் என்ற கிறிஸ்தவ மடமொன்றினால் நடத்தப்படும் இயேசு மேரி பள்ளிக்கூடத்தில் முதல்வரின் அறையில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுங்கி இருந்தவர்கள் பின்னர், அதே வளாகத்தில் இருந்த கிறிஸ்தவ மடத்துக்குள் நுழைந்திருந்தனர்.
அங்கு மூன்று கன்னியாஸ்திரிகளே இருந்ததாகவும், அதில் இரண்டு பேரையும், காவலரையும் கட்டிப்போட்டுவிட்டு எழுபது வயதுக்கும் அதிகம் கொண்ட கன்னியாஸ்திரியை ஒருவரை அவர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தனர்.
இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து எட்டு ஒன்பது லட்ச ரூபாய் பணத்தையும் அவர்கள் திருடிக்கொண்டு சென்றிருப்பதாகவும், அங்கிருந்த தேவாலயத்தில் பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு, திருப்பலி பூசைகளின்போது பயன்ப்படுத்தப்படுகின்ற பாத்திரத்தையும் கொண்டுசென்றுவிட்டதாக பள்ளிக்கூடத்தில் இத்தாக்குதலை நடத்திய ஆறு பேரின் முகங்களும் கண்காணிப்பு கேமரா படங்களில் பதிவாகியிருப்பதாகவும். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை எட்டு பேரைக் கைதுசெய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்ற ஒரு நேரத்தில், இந்த சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், கூடுதலான பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி கிறிஸ்தவக் குழுக்கள் பல இந்த சம்பவத்தை கண்டித்தும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன.
இந்தியப் பிரதமருடன் உரையாடியது தொடர்பாக ஊடகங்களுக்கு – மனோ கணேசன்
‘தமிழர் ஒற்றுமை’ என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக நான் இப்போதுதான் அறிந்து வருகிறேன். மலையகத்தில் வாழும் பின்தங்கிய இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் இப்போது திரட்டி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read more