வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா இன்று (14.03.2015) சனிக்கிழமை காலை 9மணியளவில் முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. குணராஜா சிவகுமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும்இ வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும்இ தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள்இ பெற்றோர்கள்இ மாணவர்கள்இ கிராம முக்கியஸ்தர்கள்இ நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர். மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சிஇ முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள்இ வினோத உடை நிகழ்ச்சிஇ பழைய மாணவர் நிகழ்ச்சிஇ பெற்றோர் நிகழ்ச்சிஇ விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.