சங்கானை மேற்கு பிரதேச நூலக திறப்பு விழா

Vali west01வலி மேற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சங்கானைப் பிரதேச நூலகம் கடந்த 09.02.2015 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்  நிகழ்வு வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரன் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தலைவருமாகிய கௌரவ.மாவை.சோ.சேனாதிராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.அப்பாத்துரை.விநாயகமூர்த்தி, கௌரவ.ஈஸ்வரபாதம்.சரவணபவன்,கௌரவ.சுரேஸ்.பிரேமச்சந்தின கௌரவ.சிவஞானம்.சிறீதரன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கௌரவ.தர்மலிங்கம்.சித்தாhத்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினரர்களான கௌரவ.விந்தன்.கணகரட்ணம், கௌரவ.இமானுவேல்.ஆணோட் பேராசிரியர். சி.க.சிற்றம்பலம் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். தலைமை உரையினை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் வழங்கினார். இதன்போது அவர் உரையாற்றுகையில் மிக நீணட காலமாக கண்ட கணவு இன்றைய இவ் நன் நாளில் பூர்த்தி ஆகியுள்ள நிலையை எண்னும் போது மிக மகிழ்வாக உள்ளது. இவ் நிலையில் இவ் வேலைத்திட்த்தில் எம்மோடு பணியாற்றியவர்கள் தொடாபில் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் இவ் பிரதேசம் சகலருக்குமான ஒன்றாகவே உள்ளது. நிலைமைகளை கருத்தில் கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும்.  இதே வேளை தங்களுக்கு உரிய கடமைகளை ஒவ் வேர் வரும் பொறுப்புடன் செய்யவேண்டும் எனக் கருதுகின்றேன். பிரதேச ரீதியான அரசியலுக்கு அப்பால் ஒத்துளைக்கமை தொடாபில் உரிய முறையான நடவடிக்கைகளை குறித்த திணைக்களங்கள் மேற்கொள்ளப்பட வேண்டடும். மக்களுடைய விருப்பம் எதுவோ அது நிறைவு செய்யப்பட வேண்டும். ஒரு நூலகம் என்பது உயிரோட்டமான ஒன்று அது வெறுமனே காட்சிக் கூடம் இல்லை இவ் நூலகம் வாயிலாக ஒர் தனி மனிதன் அல்ல ஓர் சமூகம் நன்மை அடைய வேண்டும் என்றும் மேலும் பல கருத்துக்களை சொன்னார் 
இவ் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வமாகாண சபை உறுப்பினருமான கௌரவ.தர்மலிங்கம் சித்தர்hத்தன் உரையாற்றுகையில். இன்று இவ் நிகழ்வின் சிறப்பினை அவதானிக்கும் போது மிக மகிழ்வாக உள்ளது.ஒரு பெண்ணாக அதனிலும் வடமாகாண ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரே பெண் தவிசாளராக துணிச்சலுடன் காரியத்தினை நிறைவேற்றுகின்றமை பாராட்டத்தக்கது. இதனிலும் பல வேறு திட்டங்கள் தொடர்பில் இப் பெண் தவிசாளரது துணிச்சலும் வேகமும் பாராட்டப்பட கூடிய ஒன்றாகவே உள்ளது. இவ் நிலையில் இவ் நூலகத்திறப்பு விழாவில் கலந்து சிறப்பிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது வெறுமனே ஒரு துறை அல்லது குறித்த சில துறை சார்ந்த ஒன்றாக அமைவது அல்ல அதற்கும் மேலாக சகல துறை சார்ந்த தாகவே செயற்பாடுகள் அமைய வேண்டும் இவ்வாறு அமையும் பட்சத்தில் மட்மே பூரண அபிவிருத்தி என்பது நடைபெறத்தக்கதாக அமையும் இந்த வகையிலும் இவ் வலி மேற்கு பிரதேசத்தில் பல துறை சார்பிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம் பெறுவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகவே கொள்ள முடியும் இவ் சிறப்பான செயற்பாடுகள் தொடாபில் வாழ்த்துகின்றேன் எனக்குறிப்பிட்டார்

Vali west02 Vali west04 Vali west05 Vali west06 Vali west07 Vali west08. Vali west08 Vali west09 Vali west10 Vali west11 Vali west12 Vali west13 Vali west14 Vali west15