தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் ORHAN மாணவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது!! (படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு.முத்தையா கண்ணதாசன் அவர்களின் செல்வப்புதல்வி அட்சயா அவர்களின் 16வது பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தை (ORHAN) சேர்ந்த மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (16.03) விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் திரு.சுப்பிரமணியம், நிர்வாக உத்தியோகத்தர் திரு.குலராஜா தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு.மு.கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சு.காண்டீபன், செயலாளர் திரு.ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு.த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு.வ.பிரதீபன், உறுப்பினர் திரு.அபிசேக், திரு.செந்தூரன், திரு.சுரேஷ் மற்றும் கழக உறுப்பினர்கள் நிறுவனத்தின் பணியாளர்கள்இ நிறுவனத்தின் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொடிய யுத்தம் மற்றும் பல்வேறு இயற்கை செயற்கைக் காரணிகளால் அங்கவீனர்களாயும் வலுவிழந்தும் மனச்சோர்வுடைய மனிதர்களாய் வாழ்க்கையில் நம்பிக்கையற்று எம் எதிர்காலமே சூனியமாகிவிட்டதே என்ற மனநிலையில் செய்வதறியாது வீடுகளுள் முடங்கிக்கிடப்போரை அன்புக்கரம் நீட்டி அனைவருமே ஆனந்தமாய் வாழப்பிறந்தவர்கள் என்ற நல்எண்ணத்தை நம்பிக்கையை ஊட்டி அரவணைத்து அவர்களை மாற்றுவலுவுள்ளவர்களாக சமூகத்தில் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழவைக்கும் உன்னத நோக்குடன் பல நெருக்கடிகளை சந்தித்தும் தலை நிமிர்ந்து தம் பணியை சிறப்புடன் செய்து வருகிறது வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் (ORHAN)
உடைந்துபோன உள்ளத்துடன் வாழும் மனிதர்களுக்கு நம்பிக்கை ஒளியை வாழ்விலே ஏற்றிவைத்து வருகின்ற ORHAN நிறுவனமும் அங்குள்ள பணியாளர்களுக்கும் தமிழ் தேசிய இளைஞர் கழகம் இரு கரம் கூப்பி நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
காலத்தின் தேவையறிந்து தூர நோக்குடனும் இரக்க சிந்தனையுடனும் செயற்படும் இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிவை.