வவுனியா  நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள் இணைப்பு)

Nelukkulam04வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (17.03) பிற்பகல் 02.00 மணியளவில் வித்தியாலய அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா வலயக் கல்விப் பணிமனை பொறியியலாளர் திரு.கு.சிவகுமாரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நகரசபை உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் சுபைர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஆரம்ப கல்வி  ஆசிரிய ஆலோசகர் திருமதி.எம்.தேவசேனா, வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.ப.தர்மலிங்கம் அவர்களும் பாடசாலை மாணவர்கள், ஆசரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர். மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப்போட்டி தொடர்ந்து  மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.வவுனியா செய்தியாளர் திரு

Nelukkulam01 Nelukkulam02 Nelukkulam03 Nelukkulam05 Nelukkulam06 Nelukkulam07 Nelukkulam08 Nelukkulam09 Nelukkulam10 Nelukkulam11 Nelukkulam12 Nelukkulam13 Nelukkulam14 Nelukkulam15 Nelukkulam16 Nelukkulam17 Nelukkulam18 Nelukkulam19