Header image alt text

வசாவிளான் மற்றும் வளலாய் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விஜயம்-

fffffffffயாழ். வசாவிளான் கிழக்கு ஒட்டகப்புலம் மற்றும் வளலாய் உள்ளிட்ட பகுதிகளின் காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்கு விடுவதென்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளுக்குச் சென்ற மக்களை இராணுவத்தினர் அங்கு செல்வதற்கு விடவிலலை.. வசாவிளான், வளலாய் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை குடியேற்றுவதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்றையதினம் அங்கு சென்றிருந்தனர். எனினும் மீள்குடியேற்றக் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் வசாவிளான் மற்றும் வளாலை பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நிலைமைகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியதோடு இப்பிரச்சினையை உடன் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் பாடசாலை மைதானம் புனரமைப்பு-

IMG_8073தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட சமளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மைதானம் நேற்று (20.03.2015) வெள்ளிக்கிழமை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சமளங்குளம் யுரேனஸ் கழகம் மற்றும் சமளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தமிழ் தேசிய இளைஞர் கழக கட்டார் கிளையின் நிதியுதவியுடன் பாடசாலை மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், பாடசாலை அதிபர் திரு. சிவானந்தன், பாடசாலை ஆசிரியர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு. சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன், பொருளாளர் .த.நிகேதன், ஊடக இணைப்பாளர் வ.பிரதீபன், சமளங்குளம் யுரேனஸ் கழகத்தின் தலைவர் திரு.சிம்சுபன், அமைப்பாளர் ஜெயந்தன், உறுப்பினர்களான தனோஜன், விமர்சன், மற்றும், நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்பு மீறலல்ல-அமைச்சர் வாசுதேவ-

140204184940_vasudeva_nanayakkara_304x171_lanintegmin_gov_lkதேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வதை தமிழ் இன­வா­த­மா­கவோ அல்­லது சிங்­கள இன­வா­த­மா­கவோ அர்த்­தப்­ப­டுத்த முயற்­சிக்க வேண்டாம் என நேற்று சபையில் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாண­யக்­கார தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பு மீறல் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை விவா­தத்தில் உரையாற்றும்போதே வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பின் தமிழ் மொழியாக்கத்தில் 205 ஆம் பக்­கத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் எழு­தப்­பட்­டுள்­ளது. இந்த தமிழ் மொழி பெயர்ப்பை 1940 களில் நல்­ல­தம்பி பண்­டிதர் செய்தார். அவ­ரது மொழிபெ­யர்ப்பில் சிங்­க­ளத்தில் இயற்­றப்­பட்ட தேசிய கீதத்தின் அர்த்தம் எது­வி­த­மான மாற்றமும் இல்­லாமல் அனைத்து சொற்­ப­தங்­களும் தமிழில் அமைந்­துள்­ளது. சிங்­க­ளத்தில் ஸ்ரீலங்கா நமோ மாதா என்றும் அதே­போன்று தமிழில் நமோ நமோ தாயே என்றும் ஒரு பொருளில் அர்த்­தத்தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மல்­லாது சிங்­கள இசை மெட்­டுக்கு ஏற்ற வகை­யி­லேயே தமி­ழிலும் உள்­ளது. எந்­த­வி­த­மான மாற்­றமும் கிடை­யாது. அது மட்­டு­மல்­லாது அர­சி­ய­ல­மைப்­பிலும் தமிழில் உள்­ளது. தமிழில் பாடு­வது அர­சியல் அமைப்பு மீறல் அல்ல. அது அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்­ட­தே­யாகும். தமிழ் மக்கள் பெரும்பான்­மை­யாக வாழும் பகு­தி­களில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடலாம். அதேபோன்று சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் சிங்­க­ளத்­திலும் தேசிய கீதத்தை பாடலாம். பெரும்­பாலும் தேசிய நிகழ்ச்­சி­களில் சிங்­கள மொழி­யி­லேயே தேசிய கீதம் பாடப்­ப­டு­கின்­றது. நான் சமூக ஒரு­மைப்­பாடு அமைச்­ச­ராக அந்த ஆட்­சியில் இருந்த போது ஒரு யோச­னையை முன்­வைத்தேன். தென்­னா­பி­ரிக்­காவைப் போல் இலங்கையிலும் தேசிய கீதத்தை சிங்­கள தமிழ் சொற்­ப­தங்­களைக் கொண்டு சேர்த்து பாட வேண்டும் என. அப்­போது தேசிய கீதத்தில் இரண்டு மொழி­களும் கலந்து விடும். ஆனால் அது நிறை­வே­ற­வில்லை. ஜனா­தி­பதி சிங்­க­ளத்தில் உரை­யாற்றும் போது அந்த உரையை தமிழில் மொழி பெயர்க்கின்றோம். எனவே தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தமிழ் இனவாதமாகவோ அல்லது சிங்கள இனவாதமாகவோ அர்த்தப்படுத்தல் கூடாது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விபூசிகா தாயாருடன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு-

porvikaபயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட ப.ஜெயக்­கு­மா­ரியின் மக­ளான விபூ­சி­காவை தாயா­ருடன் செல்­வ­தற்கு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் அனு­மதி மறுத்­துள்­ளது. புலி­களை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முயற்­சித்­தார் என்ற குற்­றச்­சாட்டில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின்கீழ் கைது செய்­யப்­பட்ட ஜெயக்­கு­மாரி பிணையில் விடு­விக்­கப்­பட்டபோதும் அவ­ரது மக­ளான விபு­சிகா நீதி­மன்ற உத்­த­ர­விற்கு அமைய கிளி­நொச்­சியில், இயங்கிவரும் மகா­தேவா சைவச்­சி­றுவர் இல்­லத்தில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்தார் விபு­சி­காவை சிறுவர் இல்­லத்தில் இருந்து பொறுப்­பேற்­ப­தற்கு அவ­ரது தாயான ஜெயக்­கு­மாரி கண்­டா­வளை பிர­தேச சிறுவர் நன்­ன­டத்தை அதி­காரி ஊடாக விண்­ணப்­பித்­தி­ருந்தார். இந்­நி­லையில் இம்­மனுமீதான விசா­ரணை நேற்று கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்­றத்தில் நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்­னி­லையில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது கண்­டா­வளை பிர­தேச சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரி­யுடன் விபு­சிகா மற்றும் அவ­ரது தாயார் ஆகியோர் ஆய­ராகி இருந்தார். ஜெயக்­கு­மாரி சார்­பாக ஆய­ரான சட்­டத்­த­ர­ணி­க­ளான திரு­மதி. எஸ்.விஜ­ய­ராணி, ம.கிறே­சியன், சுந்­த­ரே­ச­சர்மா, துசி­யந்தி, றைகான், ஆகியோர் ஆய­ராகி குறித்த சிறு­மியை பெற்­றோ­ருடன் செல்­வ­தற்கு நீதி­மன்றம் அனு­ம­திக்க வேண்டும் என கோரி­யி­ருந்­தனர். அதன்­போது ஜெயக்­கு­மா­ரியும் அவ­ரது மக­ளான விபு­சி­காவும் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர் என பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வி­னரால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அத்­துடன் சந்­தேகநபர்­க­ளாக கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­லேயே குறித்த சிறுமி சிறுவர் இல்­லத்தில் தங்க வைக்­கப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டது. இத­னை­ய­டுத்து விபு­சிகா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே தயாரிடம் இணைவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும் என நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் குறிப்பிட்டதுடன் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் தேர்தல் ஆணையாளர் சந்ராநந்த காலமானார்-

chandruமுன்னாள் தேர்தல் ஆணையாளர் ஆர்.கே. சந்ராநந்த டி சில்வா காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமது 78வயதில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 1982ம் ஆண்டு மே மாதம் நான்காம் திகதி இலங்கையின் தேர்தல் ஆணையாளராக பதவி ஏற்றார். அவர் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கான இலங்கையின் தூதுவராகவும் செயற்பட்டிருந்தார்.