தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் பாடசாலை மைதானம் புனரமைப்பு-

IMG_8073தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட சமளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மைதானம் நேற்று (20.03.2015) வெள்ளிக்கிழமை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சமளங்குளம் யுரேனஸ் கழகம் மற்றும் சமளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தமிழ் தேசிய இளைஞர் கழக கட்டார் கிளையின் நிதியுதவியுடன் பாடசாலை மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், பாடசாலை அதிபர் திரு. சிவானந்தன், பாடசாலை ஆசிரியர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு. சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன், பொருளாளர் .த.நிகேதன், ஊடக இணைப்பாளர் வ.பிரதீபன், சமளங்குளம் யுரேனஸ் கழகத்தின் தலைவர் திரு.சிம்சுபன், அமைப்பாளர் ஜெயந்தன், உறுப்பினர்களான தனோஜன், விமர்சன், மற்றும், நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.