வலிமேற்கு பிரதேச சபையில் உலக நீர் தினம் அனுஷ்டிப்பு-

vali westயாழ். வலிமேற்கு பிரதேச சபையின் கலாச்சரா மண்டபத்தில் உலக நீர் தினம் நேற்று (22.03.2015) ஞாயிற்றுக்கிழமை வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞசினி ஐங்கரன் அவர்களது தலைமையில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அமைச்சின் அமைச்சர் கௌரவ. பொ.ஐங்கரநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் திரு.ச.ரவி மற்றும் யாழ்பல்கலைக் கழக இரசாயனவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி .க.வேலாயுதமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர், கௌரவ விருந்தினர்களாக வேள்ட் விசன் நிறுவன யாழ்மாவட்ட செயற்பாட்டு முகாமையாளர் திரு.ஜெயாட் அன்டனி மற்றும் வேள்ட் விசன் நிறுவன யாழ்மாவட்ட திட்ட முகாமையாளர் திரு.பிரான்சிஸ் அலெக்ஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மதியம் 2.00 மணியளவில் நிகழ்வுகள் வலக்கம்பறை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுvaliwest1 valiwest2 valiwest3விருந்தினர்கள் மேலைத்தேய வாத்தியம் மற்றும் கிராமிய பொம்மலாட்டம் நிகழ்சிகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இவ் ஊர்வலம் வலி மேற்கு பிரதேச சபையின் வாயிலில் நிறைவடைந்தது. இதன்போது தவிசாளரால் தமிழ் அன்னைக்கு மலர்மாலை சூட்டப்பட்து. தொடாந்து வட்டு இந்துக் கல்லூரி மாணவர்களால் தமிழ் தாய் வாழ்த்து இடம் பெற்றது. தொடாந்து மதகுருமர் மங்கல விக்கேற்றி ஆரம்பிக்க நிகழ்வு தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது. முன்னதாக வலி மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் திரு.ரமேஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கியதனைத் தொடாடந்து ஆசியுரை நிகழ்வு சபா வாசுதேவக்குருக்கள் மற்றும் அருட்பணி செபஸ்டியன் அன்டனி அவர்களல் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவிசாளரால் தலைமை உரை வழங்கப்பட்டது. இதன்போது திருமதி. நாகரஞசினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இன்று உலக நீர் தினத்தினை இவ் இடத்தில் மேற்கொள்வதில் பெரு மகிழ்வு அடைகின்றேன். இவ் நிகழ்வினை எமது பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதனில் பெரு விருப்பு கொண்டிருந்தேன். மனிதனுடைய பல்வேறு தேவைகட்கும் இவ் நீர் மிக இன்றி அமையாத ஒன்றாகவே உள்ளது. இவ் நீர் என்பது மனிதனின் பிறப்பு முதலாக இறப்பு வரையிலான தேவைகள் அனைத்துக்கும் இவ் நீர் என்பது இன்றி அமையாத ஒன்றாகவே உள்ளது. இவ் நீர் தொடர்பாக கடந்த காலங்களில் நாம் அதிகம் அக்கறை செலுத்தாத நிலையே இன்றைய இவ் நிலைக்கு பிரதான காரணம் ஆகும். இன்றைய நிலை தொடாடபில் நாம் அனைவரும் அக்கறை உடையவர்களாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த நாட்டின் நாகரீக பரவல் நீர் நிலையினை மையமாக கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. அக் காலத்தில் அரசாண்ட ஒவ்வொரு அரசர்களும் நீருக்கு மிகுந்த முக்கியம் வழங்கி அதனடிப்படையீலேயே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பது வரலாறு இவ் நிலையில் கடந்தகால நீண்ட கொடிய யுத்தங்கள் மற்றும் இடப்பெயர்வுகள் எமது பல நீர் வழங்கள் கைவிடப்பட்ட நிலையினை அடைந்து விட்டது. இந்த நிலை எமது பிரதேச ரீதியிலும் தாக்கத்தினை உண்டு பண்ணியுள்ளது. இவ் வகையில் பல குளங்களைக் கொண்ட எமது பிரதேசம் விவசாயத்தில் தங்கியுள்ள நிலையில் நிலத்தடி நீரைப் பாதுகாக்ககூடிய வகையில் எமது பிரதேசத்தின் குளங்களை உரிய முறையில் சீர்படுத்தி செளிப்பான விவசாயப் பிரதேசமாக மாற்றுவதற்கு வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சு உதவவேண்டும். இதற்கும் மேலாக நன்னீர் விநியோகம் தொடாபில் பிரதேச சபையானது மிகப்பரிய பொறுப்பினை கொண்ட நிலை உள்ளது. மிக நீண்ட காலமாக நீர் பெற்று வந்த இடங்களில் தற்போது நீர்பெற முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் புதிய நீர் பெறக்கூடிய இடங்களை தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரதேச சபையின் முக்கிய பணிகளில் ஒன்றாகவே இவ் நீர் வளங்கும் பணி இடம் பெற்று வருவது குறிப்பிடக் கூடிய ஒன்றாகும். நாம் இங்கு ஆட்சிக்கு வந்த போது ஒரு இரும்பு நீhத்தாங்கி வாயிலாக மட்டும் நீர் விநியோகம் நடைபெற்று வந்தது ஆனால் தற்பேது வேள்ட் விசன் நிறுவனத்தின் உதவியுடக் மேலும் இரண்டு நீர்த்தாங்கிகள் பெறப்பட்டு நீர் வினயோகம் இடம் பெற்று வருகின்றது இதேவேளை ஆட்சி மாற்றம் காரணமாக அண்மையில் தெரிவான புதிய அரசு எமது பிரதேச மக்களுக்கு நீர் வினயோகம் மேற் கொள்ளத்தக்கதாக புதிய இயந்திர பௌசர் ஒன்றினை வழங்கியும் உள்ளது இவ் நிலையில் எமது மக்களின் தேவைக்குரிய நீர் வசதியினை மேற் கொள்ளக்கூடிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதே வேளை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பரிவினரும் வேள் விசன் அமைப்பினரும் எமது பிரதேசத்திற்கு நீர் தொடாபில் ஆற்றும் பணிகள் என்றுமே மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இவ் நீர் தொடாபில் மேலும் விழிப்புனர்வு ஏற்படுத்தும் பொருட்டு 8 பிரிவுகளாக மாணவர் மத்தியில் கட்டுரைப் போட்டியினை நடாத்தியுள்ளோம் ஏறத்தாள 650 மாணவர்கள் வெற்றியாளர்காக தெரிவு செய்யப்பட்டு இன்று பரிசில்கள் பெறுவதற்கு தயாராக உள்ளனர். இதற்கும் மேலாக திறந்த போட்டியிலும் பலர் கலந்துகொண்டு சிறந்த ஆக்கங்களை வழங்கி உள்ளனர் அவர்களில் தெரிவு செய்யப்பட்ட முக்கிய கட்டுரையாளர்களுக்கும் இன்று இவ் நிகழ்வில் கொளரவிக்கப்பட உள்ளனர் இவ்வகையில் மக்கள் மத்தியிலும் நீர் தொடாபில் மேலும் விழிப்புணர்வு அவசியமாகவே உள்ளமையும் குறிப்பிட முடியும் எனக் குறிப்பிட்hர். இவ் நிகழ்வின் பின்னர் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரால் இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த வட மாகாண விவசாய அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார் தொடாடந்து சிறப்பு விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர் சிறந்த கட்டுரையாளர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.