இலங்கை- தமிழக மீனவர்களிடையே பேச்சுவார்த்தை-
இலங்கை- தமிழக மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை டி.எம்.எஸ். மீன்வளத்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக, இலங்கை மீன்பிடித்துறை இயக்குநர் பெர்னாண்டோ தலைமையில், மீனவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி சதாசிவம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர், நேற்று சென்னை சென்றிருந்தனர். இரு நாட்டு மீனவர்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.