கட்டார் நாட்டின் அமீர் இலங்கை வருகை-
கட்டார் நாட்டின் அமீர், ஷெய்க் தமீம் பின் ஹமட் – அல்- தானிஇலங்கையை வந்தடைந்துள்ளார். சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை மாத்திரமே இலங்கையில் தங்கியிருக்கும் இவர் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் செய்தி பரிமாற்றம் ஆகியன தொடர்பிலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென தெரியவருகிறது. இலங்கையில் தங்கியிருக்கும் சில மணித்தியாலங்களில் கட்டார் அமீர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் அவரும் அவரது பிரதிநிதிகளும் அரசாங்க தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களிலும் பங்குபற்றவுள்ளனர். கட்டார் நாட்டின் அமீர் வருகையை முன்னிட்டு கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.