நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்தது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது-

arrest (30)யாழ். ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமைநேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தின்பேரில் நேற்று கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் நேற்று அவர்களது வீடுகளில் வைத்து கைதுசெய்துள்ளனர்.இருவரையும் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டுவரும் பொலிஸார், இச்சம்பவம் அரசியல் உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மேற்படி பாடசாலையின் நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த நீரை பருகிய 26 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.