ஜேர்மன் விமானம் 150 பயணிகளுடன் பிரான்ஸ் மலைப்பகுதியில் விழுந்தது

Fa320ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானநிறுவனத்தின் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம்; ஒன்று ஸ்பானியாவின் பார்சிலோனா நகரில் இருந்து ஜேர்மனியின் டுசல்டார்ஃப் நகருக்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது அதில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிரான்சின் டின் லே பான் நகருக்கு அருகே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்துள்ளது.
அந்த விமானத்தில் மொத்தம் 150 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது. விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லையென செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் 5000 அடி  உயரத்தில் பறந்ததாகவும் விழுவதற்கு முன்னர் அபாய சமிக்ஞை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
a320.இறந்தவர்களில் பெரும்பாலோனோர் ஸ்பானியா மற்றும் ஜேர்மன் நாட்டை சேந்தவர்கள். விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் ஜேர்மன் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 16 மாணவர்களும் பயணித்துள்ளனர்.
இதனிடையே விமானம் குறித்த தகவல்களை, தரவுகளை பதிவு செய்யும் கருப்புப் பெட்டிகளில் ஒன்று விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ள விமானம் தூள்தூளாகச் சிதறியுள்ளதாகவும், எந்தவொரு பகுதியும் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என்றும் விமானத்தில் பயணித்த 150பேரும் உயிரிழந்துவிட்டதாகக் கருதப்படுகிறது