பொன்னாலை கலாச்சார பொது மண்டபத்தில் சர்தேச மகளிர்தின நிகழ்வு-

P1020772P1020752சர்வதேச மகளிர் தினம் கடந்த 19.03.2015 அன்று யாழ். பென்னாலை கலாச்சார பொது மண்டபத்தில் பொன்னாலை மாதர்கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திருமதி. தவஆனந்தி சந்திரகாந்தன் தலைமையில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பித்தது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சங்கானைப் பிரதேச செயலக உதவிப் பிரதேசசெயலர் திருமதி. கிருஸ்ணவதனா. செந்தூரன், சங்கானைக் கேட்டக்கல்விப் பணிப்பாளர் செல்வி. சாந்தா மரியம்பிள்ளை, லயன்.தி.உதயசூரியன், கரிதாஸ்-கியூடெக் நிறுவன திட்டப்பணிப்பாளர், திருமதி. பத்மசேகரி இளைப்பாறிய முன்னாள் அதிபர்கள் ஆகிய திருமதி. கிருபாசக்தி சிவராசா மற்றும் சகலகலாவல்லி. சந்திரராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வில் சிறப்பு அதிதியாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். P1020768P1020739P1020773P1020778P1020779P1020748P1020775P1020777பொன்னாலை பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தெர்ர்ந்து மேலைத்தேய வாத்திய கருவிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதனைத் தொடாடந்து மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது தொடர்ந்து மாதர் சங்கத்தின் முன்னாள் தலைவி திருமதி தங்கராஜா பகவதி அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார் தொடர்ந்து நிகழவின் ஆசி உரையினை பொன்னாலை விநாயகர் ஆலய குரு தியாகராசா பொன்னம்பலவாணண் அவர்களும் தென் இந்திய திருச் சபையின் அருட்பணி செபஸ்டியன் அன்டனி அவகளும் வழங்கினர். தொடாந்து சங்கத்தலைவரால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. இவ் நிகழ்வினைத் தெடாடந்து சங்க எல்லைக்கு உட்பட்ட மாணவர்களது நிகழ்வுகள் இம் பெற்றது. இவ் நிகழ்வினைத் தெடாந்து பிரதம விருந்தினராக பலந்து சிறப்பித்துக் கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், சர்வதேச பெண்கள் தினம் எமது பிரதேசத்தின் பல பகுதிகளிலும் இன்று நடைபெற்றுவருவது பெண்கள் மத்தியில் சமூகம் மத்தியில் ஒர் விழிப்புனர்வு ஏற்பட்டு விட்டது என்பதனை மிகத் தெளிவாக எடுத்துக் காடட்டும் ஒன்றாகவே கொள்ளப்பட வேண்டும். இவ் நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே கடந்த காலங்களில் பல வடிவங்ளிலும் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் மத்தியில் போட்டிகளை ஏற்படுத்தி அதன் வாயிலாக பல்வேறு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தேன். இவ் நிலமை இன்று எமது பிரதெசம் எங்கும் இவ் பெண்கள் தினத்தினை நிகழ்துவதற்கு மிகுந்த உந்து சக்தியாக அமைந்து விட்டது. பெண்கள் சகல துறைகளிலும் இன்று தடம் பதித்து அன்று காணப்பட்ட நிலையினை தகர்த்து எறிந்துள்ளனர் இவ்நிலை மிகச் சிறப்பான ஒன்றாகவே கருத வேண்டும் இருந்தும் சில பழமை வாதிகள் பழைய சிந்தனைகளை கொண்டு பெண்களை புறம் தள்ள நினைப்பதும் அதன் வாயிலாக அடக்கு முறைகட்கு உட்படுத்துவதும் இங்கு குறிப்பிக்கூடிய ஒரு விடயம் என்றே கூற முடியும். பெண்கள் சமூதாயத்தில் எத்துறையில் முன்னேறினாலும் அங்கு ஏதாவது தன்மையில் அவர்களது செயற்பாடுகட்கு இiயூறு ஏற்படுத்த வேண்டும் என்பதில் அதிக முனைப்பு கொண்டவர்களாக பலர் காணப்படுகின்றனர் இவர்களது மனதளவில் உள்ள சிந்தனைத் தன்மைகளில் மற்றங்கள் ஏற்படுத்த நாம் அனைவரும் முயற்சிகள் தொடாந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான பல சாதனைகளை பெண்கள் நிகழ்தியுள்ள நிழலயிலும் இரட்டை சுமை நிலையில் இருந்து கொண்டே இவர்கள் தமது சாதனைகளை நிலை நிறுத்துகின்றனர் என்பதனை அடக்கு முறையினை நிகழ்த்துபவர்கள் தெளிந்து கொள்ள வேண்டும். அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர் முதற்கொண்டு பணத்திற்கும் கௌரவத்திற்கும் ஆசைப்படுபவர்கள் வரையில் பல வகைகளிலும் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு பெண்கள் பின் தள்ளப்படும் நிலை உருவாகின்றது. இவ் நிலையில் மாற்றம் ஏற்பட கடுமையாக உழைக்க வேண்டும். இதற்கும் மேலாக பெண்கள் உயர்ச்சியில் பெண்கள் மகிழ்வு கொள்ளவேண்டும். ஒருவருக்கு ஒருவர் உறுதுனையாக உதவியாக வாழ்வது பெண்களின் கௌரவத்தினை மேலும் உயர்த்தும். அன்று ஒரு நாள் வீட்டு வேலைக்கு மட்டுமே பெண்கள் எனற நிலை மாறி நாட்டை மீட்பதற்கும் பெண்கள் புறப்பட்ட நிலையை கொண்டது எம் தேசம் தரையில் கடலில் விடுதலைக்காக புறப்பட்ட வீர மகளிரின் தடங்கள் பதிந்தது இவ் மண் எநத ஒரு தேசத்திற்கும் இல்லாத சிறப்பு பெண்களால் எமது தேசத்திற்கு ஏற்படுத்தப்பட் பெருமை இந்த இனத்தினுடைய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் உருவாக்கப்பவேண்டம் இதற்கும் மேலாக எமது பிரதேசத்திலேயே பல துறைகளில் குறிப்பாக கல்வித்துறை,மருத்துவத்துறை,சட்டத்துறை,நிர்வாகத்துறை ,அரசியல் துறை போண்ற பல துறைகளிலும் பெண்கள் பல நிலைகளைப் பெற்றுள்ளனர் இவ் நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இன்று நடந்து முடிந்துவிட்ட போரால் துன்பத்தின் எல்லைக்கே சென்று விட் பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இவர்கள் எமது சமுதாயத்தின் ஓட்டத்தில் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைவரும் ஒன்று பட வேண்டும். இது தான் எமது பெண்களின் எழுச்சியக மாற்றம் பெறவேண்டும் எனக்குரிப்பிட்டார்.

இவ் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்துக்கொண்ட புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வட மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில் இன்று பெண்களின் எழுச்சி எனபது காலத்தின் தேவையாக உள்ளது இவ் எழுச்சி நிலை என்பது தேவையான ஒன்றாகவும் உள்ளது. இந்த நாட்டில் 50 வீதத்திற்கு மேலாக பெண்கள் உள்ள நிலையில் தீர்மானிக்கும் சகதி என்பதில் பெண்களின் நிலை மிக முக்கியமாக உள்ளது. பல துறைகளில் பெண்களின் எழுச்சியினை இன்று அவதானிக்க முடிகின்றது. இவ் நிலையில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் மாற்றம் என்பது மிகச் சிறந்த நிலையினை அடைந்து வட்டது என்றே குறிப்பிட முடியும். இதற்கும் மேலாக இன்றைய மிக முக்கியமான தேவையாக உள்ளமை பாதிக்கப்பட்ட பெண்கள் தொடாபான செயற்திட்ங்கள் இவ் விடயம் தொடாபில் புலம் பெயர் உறவுகள் அதிகம் உதவ வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் சமூதாய நீரோட்டத்தில் கலக்கப்படவேண்டும் பிரரில் தங்கி இருக்காது தமது தேவைகளை தாமே நிறைவேற்றக் கூடியவர்களாக மாறும் நிலையினைப் பெற வேண்டும். இவ் நிலைக்கூடாக அவர்களது வாழ்வாதாரம் கட்டி வளர்க்கப்படவேண்டும். இவ்வாறான விடயம் தொடாடபில் பெண்கள் அமைப்புக்கள் தேவைகளை அறிந்து முன் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். உங்கள் பிரதேசத்திற்கு திறமையான ஆற்றல் மிக்க பெண் தவிசாளரைக் கொண்டுள்ளீர்கள் இவ் விடயம் காரணமாக அவர் ஊடாக உங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் போது பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகும் என குறிப்பி;ட்டார். இதனைத் தொடார்ந்து விருந்தினர்கள் முன்னிலையில் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது சேவையைப் பாராட்டி பாராட்டுப்பத்திரம் வழங்கப்பட்டது தொடர்ந்து பிரதேச ரீதியில் பெண்கள் கௌரவிப்பு மற்றும் புலமைப்பரிசில் சித்திபெற்ற மாவர்கள் கௌரவிப்பு என்பன நடைபெற்று நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.