Header image alt text

கண்ணீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 28 March 2015
Posted in செய்திகள் 

edved fr

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போஆ மாநாட்டில் விசேட உரை-

maiththiriசீனாவில் நடைபெறும் ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தியுள்ளார். ஆசியாவின் அபிவிருத்தி தொடர்பில் அன்னியோன்ய கருத்துக்கள் பரிமாற்றத்தின் மேடையாக கருதப்படும் போஆ மாநாடு சீனாவின் ஹய்னான் பிராந்தியத்தில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளின் அரச தலைவர்கள் உட்பட அரச அதிகாரிகள் 2800 பேரும் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் தலைவர் முன்னாள் ஜப்பானிய பிரதமரான யஷ_வோ புகுடா மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், பிரதான உரையை சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் நிகழ்த்தினார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுவீடன் பிரதமரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண இலங்கை முயற்சி-

hinduஇலங்கை அரசாங்கம் இந்தியாவையும், சீனாவையும் சமநிலையில் கையாள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை தமது ஆசிரிய தலையங்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு வார காலத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். புதிய அரசாங்கம் இலங்கையில் பதவி ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் சீனாவை பாதிக்கும் வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக 1.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனாவின் துறைமுக நகர நிர்மாணப் பணிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து சீன அரசாங்கம் கரிசனை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு நிகராக சீனாவுடனான உறவையும் சமநிலையில் பேணும் வகையிலான செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுப்பதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

அகதிகளைத் தடுக்கும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா வரவேற்பு-

australiaசட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி அகதிகள் பயணிக்காதிருக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவுஸ்திரேலியா திருப்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா நோக்கி செல்லும் அகதிகளின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. இலங்கையின் இந்த நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் தீர்வுக்காகவே அரசாங்கத்துக்கு ஆதரவு-கூட்டமைப்பு-

tna (4)தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காகவே தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் சந்திக்கின்ற காணிப் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணை குறித்து பிரதமர் கருத்து-

ranil01காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யவிருப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்றிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றபோது இரகசிய முகாம்கள் எவையும் இருக்கவில்லை. சில காலங்களுக்கு முன்னரும் அவ்வாறான முகாம்கள் இருக்கவில்லை. ஆனால் அதற்கும் முன்னர் இவ்வாறான இரகசிய முகாம்கள் இருந்ததா? என்பது குறித்து தம்மால் முடியாது. ஆனால் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் போது இந்த விடயங்கள் உள்ளிட்ட முழுமையான ஆய்வின் பின்னர், தகவல் வழங்கப்படும். அதன் பின்னர் இது குறித்த தீர்வினை காண முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதி-

wi fiபிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (30.03.2015) தொடக்கம் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏனைய 60 பிரதான ரயில் நிலையங்களுக்கும் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுகொடுக்க நடவடிக்i எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே திணைக்களம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிலையத்தினுடன் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக விஜய அமரதுங்க கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழப்பு-

sirisenaகோடரித் தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேன, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கோடாரியினால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான், நேற்று உத்தரவிட்டிருந்தார். இதேநேரம் பிரியந்த சிறிசேனவின் இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 3மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் 26ம் திகதி, கோடரி தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மரணமடைந்த இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம் – விஜயகாலா மகேஸ்வரன்

jaffna_unp_10பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வருகை தராமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், அவர் கலந்துகொள்ளவில்லை. அவருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் இணைத்ததாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு அவர்கள் வருகை தராதது கவலையளிக்கின்றது. அவர்கள் வருகை தராமையானது தெற்கு அரசு இங்கு வடமாகாணத்தில் தனது செயற்பாடுகளை செய்வதற்கு இடமளிப்பதாக அமையும். என்ன கோபதாபங்கள் இருந்தாலும் அதை பொது நிகழ்வுகளில் முன்னிறுத்தாது கலந்துகொள்ள வேண்டுமென கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்கு பொதிகளை வழங்கும் நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர்; கலந்துகொண்டனர்.

வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – பா.உ.சிறிதரன்

jaffna_unp_9பிரதமர் விக்கிரமசிங்க யாழில் கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகளில் என்னையும் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும்  அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. Read more

யாழ் – வல்லைவெளியில் விபத்து இருவர் மரணம்

valaiபருத்தித்துறையிலிருந்து சுன்னாகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பஸ் வண்டியும் யாழ் – வல்லைவெளிப் பகுதியில் வியாழக்கிழமை (26) மாலை நேருக்குநேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். முருகையா ஜெனார்த்தனன் (வயது 25) சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், ரவிச்சந்திரன் அஜந்தன் (வயது 14) என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. பஸ் சாரதியைக் கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80ஆக உயர்வு – மட்டக்களப்பு

hospitalமட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை(25) நடைபெற்ற திருமண வைபவமொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டோரில் சிலர், உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றுக்கு உள்ளாகியுனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
மண்முனை மற்றும் தாழங்குடா, ஆரையம்பதி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் பெரியோர், சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலரும் அடங்குகின்றனர்
தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக  ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்துள்ளார்.