யாழ் – வல்லைவெளியில் விபத்து இருவர் மரணம்

valaiபருத்தித்துறையிலிருந்து சுன்னாகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பஸ் வண்டியும் யாழ் – வல்லைவெளிப் பகுதியில் வியாழக்கிழமை (26) மாலை நேருக்குநேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். முருகையா ஜெனார்த்தனன் (வயது 25) சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், ரவிச்சந்திரன் அஜந்தன் (வயது 14) என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. பஸ் சாரதியைக் கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80ஆக உயர்வு – மட்டக்களப்பு

hospitalமட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை(25) நடைபெற்ற திருமண வைபவமொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டோரில் சிலர், உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றுக்கு உள்ளாகியுனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
மண்முனை மற்றும் தாழங்குடா, ஆரையம்பதி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் பெரியோர், சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலரும் அடங்குகின்றனர்
தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக  ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்துள்ளார்.