காரைநகர் பிரதேச நிலைமைகள் குறித்து புளொட் தலைவர் ஆராய்வு-
யாழ். தீவகம் காரைநகர் பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டார். இந்த விஜயத்தின்போது காரைநகர் பிரதேசசபைத் தவிசாளர் திரு. அ.ஆனைமுகன், வலிமேற்கு பிரதேசசபை உறுப்பினர் திரு.வ.சசிதரன் மற்றும் கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடினார். தொடர்ந்து புலம்பெயர் உறவுகளாhல் கரைநகர் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள இலவச மாலைநேரக் கல்விக்கான கட்டத்தினையும் திரு. சித்தார்த்தன் அவர்கள் பார்வையிட்டார். அத்துடன் குறித்த கல்வி அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்த அவர், அவ் அமைப்பினுடைய செயற்பாடுகள் தொடர்பில் அறிந்து கொண்டதோடு, எதிர்காலத்தில் குறித்த அமைப்புக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார்.