Header image alt text

தலாய் லாமாவுக்கு அனுமதி மறுப்பு, சீனா வரவேற்பு-

sri lanka chinaதிபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவிற்கு இலங்கை அழைப்பு விடுக்காமையானது, சீனாவிற்கு மதிப்பளித்துள்ளமையை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரசாங்க பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி த ரொய்டர்ஸ் இணைத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தலாய்லாமா இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தன. எனினும் இந்த தகவலை இலங்கை அரசாங்கம் நிரகரித்திருந்தது. இதன் மூலம் ஒரே சீனா என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் பின்பற்றுகின்றமை உறுதியாகி இருப்பதாக சீனாவின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இனவாத – மதவாத தண்டனை சட்டத்தை வரவேற்கிறேன்-மனோ-

manoஇனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பன பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். தட்டிபறிக்கப்படும் நமது உரிமைகளுக்காக தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்புவது, போராடுவது, எழுதுவது இனவாதமல்ல. அடுத்த இனத்தின் உரிமைகளை தட்டிபறிப்பது, வெட்டிக்குறைப்பது தான் இனவாதமாகும். இந்த தெளிவு அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பெரும்பான்மை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இருக்கவேண்டும். இந்த தெளிவுடன்தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த சட்டம் நல்லது. ஆனால், இந்த தெளிவு சிலருக்கு இல்லை. ஆகவே இனவாதம், மதவாதம் பேசினாலோ, எழுதினாலோ 2 வருடம் சிறைதண்டனை என குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்திருப்பதை எச்சரிக்கையுடன் வரவேற்கின்றேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு கனடா தொடர்ந்தும் உதவி-

canadaஇலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக கனடா அறிவித்துள்ளது. சர்வதேச நிலக்கண்ணி விழிப்புணர்வு மற்றும் உதவிவழங்கல் தினத்தை முன்னிட்டு கனடாவின் உயர்ஸ்தானிகரம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின், கனடா இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு உதவிவழங்கி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 8 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களை வழங்கவிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரசாங்கத்தின் 35 வேலைத்திட்டங்கள் மீளாய்வு-

sri lanka (4)முன்னாள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 35 வேலைத்திட்டங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரவிக்கின்றன. அவற்றில் 28 வேலைத்திட்டங்கள் சீனாவினால் நிதியிடப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த வேலைத்திட்டங்களின் பெறுமதி, ஊழல் மோசடிகள் மற்றும் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் குறித்தே மீளாய்வு செய்யப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு-

tamilமிழ்மொழி அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருகோணமலை மாவட்ட அரச கரும நிர்வாகத்தினர், திணைக்களங்கள் அதுவிடயத்தில் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றன. இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரனி ஜே. எம்.லாஹிர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாணசபை அமர்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமது மாகாண வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி சிங்களப் பெண்மணியாவார். சகோதரி தனது அமைச்சு கோவைகளை எமக்கு தமிழிலே அனுப்பி வைக்கிறார். அதற்காக இந்தச் சபையிலே அவரைப் பாராட்டுகின்றேன். இதுதான் நல்லாட்சிக்கான முன்னுதாரணங்கள். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் அரசகரும நிருவாகத்தினர், திணைக்களங்கள் தமிழ் மொழி விடயத்தில் அசமந்தப் போக்கிலேயே செயற்படுகின்றன. என்று அவர் குற்றஞ்சாட்டினார். பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் பதியப்படுகின்றன. பயங்கரவாத குற்றத்தடுப்பு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கூட சிங்கள மொழில் பதியப்படுவதால் ஒரு நிரபராதிகூட எதிரியாகமாறுகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. Read more

சந்திரிகா தலைமையில் ஒற்றுமைக்கான அலுவலகம்-

chandrikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில், தேசிய ஒற்றுமைக்கான அலுவலகம் அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு நல்லிணக்கத்தையும், தீர்வையும் அடைவதற்கான பரிந்துரைகளை இந்தச் செயலணி முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகத்தில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை வெளிவந்ததும் அதனை உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டிற்காக நாங்கள் கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். உள்ளக செயற்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் அரசு ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆனைக்குழுவின் 19ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில், 81.5 வீதமான மக்கள் தமது வாக்குக்களைப் பயன்படுத்தியிருந்தனர். இலங்கையின் வரலாற்றில் இது மிகப்பெரிய வாக்களிப்பு வீதமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவுசெய்வதில் நாட்டின் அனைத்து சமூகங்களும் ஐக்கியமடைந்தன. ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துதல் கருத்து சுதந்திரம், சட்டத்தை ஆட்சிப்படுத்துதல், நல்லாட்சி, மனித உரிமையை பாதுகாத்தல் ஆகிய அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக மக்கள் சிறிசேனவிற்கு வாக்களித்தனர். புதிய அரசு பதவியேற்றதிலிருந்து ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்,

Read more

இனவாத கருத்துக்களை வெளியிட்டால் இரண்டு வருட சிறை-

jail.......இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தத்தைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில் இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெளிவுபடுத்தியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும். அந்த தவறை செய்பவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா உதவி பொதுச் செயலாளர் இன்று இலங்கைக்கு விஜயம்-

un repஐ.நாவின் உதவி பொதுச்செயலாளர் ஹவுலியேங் ஷ_ இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஹவுலியேங் ஷ_ எதிர்வரும் 10ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான ஐ.நா அலுவலகம் தெரிவிக்கின்றது. இந்த காலப்பகுதியில், புதிய அரசியல் சூழ்நிலையின்கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கான தேவைகளை அடையாளம் காண்பதற்காக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடவுள்ளார். ஐநா உதவி பொதுச் செயலாளர், வட மத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வதற்கு எண்ணியுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் குறிப்பிடுகின்றது. இதன்போது, அந்த மாகாணங்களிலுள்ள அரச உயரதிகாரிகள், பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பயனாளிகளையும் ஹவுலியேங் ஷ_ சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது-

fising (1)தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை வடமாகாண மீனவர்களின் பிரதிநிதிகளும், வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சரும் கடந்த தினம் ஜனாதிபதியை சந்தித்து தமிழக மீனவர்களின் பிரசன்னம் குறித்து முறையிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இது குறித்த தமிழக மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். இவ்விடயம் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளையும் பாதிக்கும் என அவர்கள் கூறியிருந்தனர்.

தலாய்லாமா இலங்கை வருவதற்கு சீனா எதிர்ப்பு-

talai lamaதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா இலங்கைக்கு வருவதற்கான விசாவினை வழங்குவது தொடர்பில் சீனா தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் தலாய்லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைத்தமைக்கும் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நட்பு நாடு என்ற ரீதியில் இலங்கை சீனாவின் கோரிக்கைக்கு இணங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.