யோசித்த பயிற்சிபெற 210 லட்சம்; செலவு-

yosithaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் நீக்கப்பட்டார். ஜனாதிபதி பாதுகாப்பாளராக அவருக்கு அந்தளவுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்துகொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றும் அவர் பயிற்சிபெற்றமை தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பமைச்சினால் கடற்படை தலைமையகத்துக்கு கிடைத்த பணிப்புரைக்கு அமையவே யோசித்த ராஜபக்ஷ, இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவருடைய கல்விச் சான்றிதழ்கள் தொடர்பிலான ஆவணங்கள் அவருடைய தனிப்பட்ட கோப்புகளில் இல்லை என கூறப்படுகிறது.

காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு-

body foundயாழ். தொண்டைமானாறு அக்கரை கடலில் நேற்று) நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமற்போன இளைஞனின் சடலம், இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தூர் வடக்கைச் சேர்ந்த கருணாணந்தன் மிதுலன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கடலுக்கு சென்ற 12 நண்பர்களும் கடலில் குளித்த பின்னர் கேக் வெட்டுவதற்காக அனைவரையும் அழைத்தபோது, நண்பர்களில் ஒருவர் மட்டும் கரைக்கு வரவில்லை. இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் மீனவர் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், காணாமற்போனவர் மீட்கப்படவில்லை. ஏனைய 11 நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர். காணாமற்போன இளைஞன், இன்று சடலமாக மிதந்த நிலையில் மீனவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.

மொரட்டுவை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது-

arrest (30)மொரட்டுவை பிரதேசத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரகட பகுதியில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யயப்பட்டுள்ளார். கைதுசெய்யும்போது சந்தேகநபரிடமிருந்து டி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குரிய ரவைகள் 20 மற்றும் 75 கிராம் தங்க ஆபரணங்கள் என்பன என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 17ம்திகதி, குறித்த நிதி நிறுவனத்துக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் இரு சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்;.

மலையக ரயில் சேவைகளில் பாதிப்பு-

train_lanka_கண்டி, நாவலப்பிட்டியிலிருந்து நுவரெலியாவின் ஹற்றனை அண்மித்துள்ள கொட்டகலைக்கு எண்ணெய் கொள்கலன்களை ஏற்றிச்சென்ற ரயில் வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை 2.05 மணியளவில் தடம்புரண்டுள்ளது. இதனையடுத்து மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில்கள் வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளன. தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்பு-

dead.bodyகிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள 58ஆவது இராணுவ படைப்பிரிவில் பணியாற்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர், இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியை சேர்ந்த எச்.எஸ்.மதுசங்க (வயது 25) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்-

accidentமரண வீட்டுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வான், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலியானதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 12பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தேகொடையிலிருந்து அநுராபுரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அநுராதபுரம்- பெனிதெனிய வீதியில் திவுலுவ-கலகமுவ எனுமிடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது சம்வத்தில் காயமடைந்தவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம்-

presidentஜனாதிபதி மைத்திபால சிறிசேன, இம்மாதம் இறுதியில் ஜப்பானுக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர், அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இந்தியா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன் பாகிஸ்தானுக்கு இன்றையதினம் விஜயம் செய்யவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்க இராஜாங்க செயலர் ஜூனில் இலங்கைக்கு விஜயம்-

john heryஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982ஆம் ஆண்டே வருகைதந்திருந்தார். புதிதாக இலங்கையில் தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறியிருந்தார்.

வைரவர் சிலையினை விற்க முற்பட்டவர் கைது-

viravarssss13 கிலோ நிறையும் 1.5அடி உயரமுமுடைய வைரவர் சிலையை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு திருமலை வீதியிலுள்ள கடையொன்றில் குறித்த சிலையை விற்பனை செய்ய முயன்றுள்ளார். மட்டக்களப்பு கொத்துகுளத்து வீதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெகதீஸ்வரன் என்ற குறித்த நபர் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்து ஆலயமொன்றிலிருந்து குறித்த சிலை திருடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட நபர் மட்;டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.