தொல்புரம் சர்வோதய மண்டபத்தில் மகளிர்தின நிகழ்வு-
யாழ். தொல்புரம் மாதர் சங்கத்தினரால் தொல்புரம் சர்வோதய மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ் நிகழ்வின்போது வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சிறப்பு அததிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார். இவ் நிகழ்வின் குறித்த மாதர் சங்க அமைப்பினரால் தவிசாளரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புடனான சேவை தொடர்பில் மாதர்சங்க அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இவ் மகளிர் தினம் எமது பிரதேசத்தில்; பரவலான வகையில் தற்போது மேற்கொள்ளப்படுவதே மகளிர் ஆகிய எமக்கு கிடைத்த பெரு வெற்றி என்றே கூற வேண்டும். இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக மகளிர் தொடர்பிலான விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதுவே எமது இலக்கு நோக்கிய பயணத்தின் வெற்றிக் கல்லாக அமையும். இன்று பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் மீது சமூகம் கொண்டுள்ள பற்றுறுதியின் நிலையில் மேலும் பல மாற்றங்கள் இடம்பெற ;வேண்டும். இவ்வாறான மாற்றம் என்பது அடிமட்டத்திலிருந்து நாட்டின் சகல மட்டங்களிலும் ஏற்பட வேண்டும். இன்று இவ் நாட்டில் 50 வீதத்திற்கும் அதிகமாக பெண்களே காணப்படுகின்றனர்இவர்கள் சகல துறைகளிலும் தமக்கு என தனியிடம் பெற்றுள்ளனர். சில இடங்களில் ஆண்களிலும் பார்க்க பெண்களே அதிக அளவில் காணப்படுவதும் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இவ் விடயங்கள் நாட்டின் இயங்கு நிலையில் பெண்கள் கொண்டுள்ள பங்கினை மிகத் தெளிவாக காட்டி நிற்கின்றது. இவ்வாறே தேசிய உற்பத்திலும் பெண்களின் பங்கே மிக அதிகமாக உள்ள நிலை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும் இவ் நிலையிலேயே இவ் நாட்டில் பெண்கள் தினமான பங்குனி 8ம் நாளினை தேசிய விடுமுறை தினமாக மாற்றுமாறு கோரி 10000 பெண்களின் கையொப்பத்தினை பெற்று நாட்டின் முதற்பெண்மணிக்கு அனுப்பினேன் இதுவரை எதுவிதமான பதிலும் அற்ற நிலை உள்ளது. இவ் விடயம தொடாபில் மீண்டும் இவ் புதிய அரசின் முதல் பெண்மணிக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன். எமது நாட்டில் சாதனை படைத்த பெண்கள் பலர் இருந்துள்ளனர் இருந்தும் வருகின்றனர். இனத்தின் விடுதலைக்கு களமாடி காவியமான பெண் போராளிகள் வாழ்ந்த மண் இது இவ்வாறான சிறப்புக்களை கொணட எமது தேசத்தில் பெண் விடுதலை பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் மாற்றங்கள் பல ஏற்படுத்தப்பட வேண்டும். என குறிப்பிட்டார்.