வலிமேற்கில் ஜேர்மன் புலம்பெயர் உறவுகளின் உதவித் திட்டங்கள்-

germanyயாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஜேர்மனி புலம்பெயர் உறவுகளின் உதவிகள் மற்றும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் உதவிகள் என்பன இடம்பெற்று வருகின்றன. கடந்தகால கொடிய போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு இவ் உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ் உதவித் திட்டத்தில் வலி மேற்கு பிரதேசத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டில் புனரமைப்பு பணிகளை ஜேர்மன் புலம்பெயர் உறவுகள் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் இணைந்து மேற்கொண்டபோது புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேரடியாக சென்று பாhவையிட்டதுடன் ஜேர்மன் புலம்பெயர் உறவுகட்கும் நன்றி தெரிவித்தார். இவ் நிகழ்வின்போது வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ.த.சசிதரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.