தொல்புரம் சக்தி முன்பள்ளியின் கால்கோள் விழா

kaal kol vilaயாழ். தொல்புரம் சக்தி முன்பள்ளியின் கால்கோள் விழா தொல்புரம் சக்தி முன்பள்ளியில் அண்மையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். முன்னதாக மழலைகளின் மேலத்தேய கருவிகள் முழங்க மரியாதை அணிவகுப்புடன் பிரதம விருந்தினர் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நிலையத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் நிகழ்வினைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், முன்பள்ளிக் கல்வி என்பது ஒரு மனிதனது வாழ்வில் மிக முக்கிய நிலையாக காணப்படுகின்றது. இவ் நிலையில் மாணவர்கள் ஆர்வத்தோடு கற்பதற்குரிய நிலை ஏற்படுத்தப்படவேண்டும் இது மிக முக்கிய ஒன்றாகும். சிறுவர்களைக் கவரக்கூடிய றம்மியமான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்.. இதன்போது கற்கும் இடத்தினை நோக்கி சிறுவர்கள் மகிழ்வோடு வரக்கூடிய நிலை உருவாகும். சிறுவர்கள் விரும்பிய நிலையில் சிறுவர்களை கல்வி கற்பதற்கு அனுப்ப பெற்றோர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறான நிலையில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கற்கும் நிலை உருவாகும். இன்று எம் மத்தியில் எவராலும் அழிக்க முடியாத சொத்தாக அமைவது கல்வி ஒன்றே ஆகும் இவ் நிலையில் கல்வி நோக்கிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது மிக முக்கிய ஒன்றாகும். எமது பிரதேசத்தில் இயங்கி வரும் முன்பள்ளிகள் தொடர்பில் 4 வருடங்கட்கு முந்திய நிலையில் காணப்பட்ட பல குறைபாடுகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறே முன்பள்ளி ஆசிரியர்களின் பல குறைபாடுகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எம்மால் இயலுமான வரை இவ் கல்வித் துறைக்கு இயன்ற பங்களிப்பினை வழங்கி வருகின்றேன். தனி ஒரு பகுதியினராக அல்லாமல் சமூகத்தில் உள்ள அனைவரும் முயற்சி செய்து கல்விக்கான ஊக்குவிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.