ஐ,நா உதவிச் செயலர் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு–
இலங்கை;கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளில் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட பிராந்திய பணிப்பாளருமான ஹொலியங் ஸ_, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் ஐ.நாவின முன்னெடுப்புக்களுக்கு தொடர்ச்சியாக உதவி வழங்கிவரும் இலங்கை அரசாங்கத்திற்கு ஹொலியங் ஸ{, இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அரசாங்கத்தின் வேண்டுகோளின் நிமித்தம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஐநா மற்றும் யுஎன்டிபி தொடர்ச்சியாக உதவி வருவதை அமைச்சரிடம் ஐ.நா பிராந்திய பணிப்ப்hளர் ஹொலியங் ஸ_ எடுத்துக் கூறினார். அதேபோல இலங்கை ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற 60 வருடத்தையும் ஐ,நா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட 70வது வருடத்தையும் நினைவுகூறும் 70, 60 எனும் பிரசாரத் திட்டத்தை அமைச்சு ஐ.நாவுடன் இணைந்து முன்னெடுத்தமைக்கு அவர் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
யாழ். சங்கானை பொதுநூலக திறப்பு விழா-
யாழ். சங்கானை பொதுநூலக திறப்புவிழா அண்மையில் நடைபெற்றது இதன்போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் தனது மாதாந்த கொடுப்பனவு வாயிலாக நூலகத்தின் முகப்பில் சரஸ்வதி சிலை ஒன்று வைக்கப்பட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம விருந்தினரான பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தலைவருமாகிய கௌரவ. மாவை சோ. சேனாதிராஜா அவர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டு, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலாக தனது மாதாந்த கொடுப்பனவுகளை போரால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் சமூகநலத் திட்டங்களுக்கும் வழங்கி வருகின்றமையை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.
19வது திருத்தச் சட்டம்: சில பிரிவுகளுக்கு வாக்கெடுப்பு-
19வது திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். எனினும் அதிலுள்ள சில பிரிவுகளில் சிக்கல் இருப்பதால் அது மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த சிக்கலான பிரிவுகளை நீக்குவதாக கூறியுள்ளார். 19ம் திருத்தச் சட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்தை அண்மையில் அரசாங்கம் வினவியிருந்தது. நீதிமன்றம் இது பற்றிய தன் பரிந்துரையை சபாநாயகரிடம் கூறியிருந்தது. இதனை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் இன்றுமாலை 03.00 மணியளவில் இது பற்றி கலந்துரையாட கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராளுமன்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் ரயில் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்-
வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக, ரயில் கடவை காப்பாளர்கள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மதவாச்சி – மன்னார், வவுனியா – புளியங்குளம் ரயில் மார்க்கங்களில் கடந்த 20 மாதங்களாக ரயில் கடவை காப்பாளர்களாக பணிபுரியும் தமக்கு 7500ரூபா சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் ரயில் சுட்டிக்காட்டியுள்ளனர். வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்றுகாலை 10 மணியளவில் ஒன்றுதிரண்ட ரயில்கடவை காப்பாளர்கள், சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்-
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், தனது 81 வயதில் சென்னையில் நேற்றிரவு காலமானார். எழுத்தாளர் ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகர் நாகாத்தம்மன் கோயில்தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன் சிறுநீரக பாதிப்பால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் சுகயீனமுற்று மரணமடைந்துள்ளார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞானபீட விருதை பெற்ற 2ஆவது தமிழ் எழுத்தாளர் என்ற சிறப்பை பெற்றவர் இவர். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பலவற்றில் கால்பதித்தவர். 1934ல் கடலூரில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமல் 5ம் வகுப்புடன் தனது படிப்பை முடித்தார். பின் விழுப்புரத்தில் மாமா வீட்டில் வளர்ந்த அவர், சென்னைக்கு குடிபெயர்ந்தார். சமூக நலனில் அக்கறையும், இலக்கியத்தில் மிக ஈடுபாடும் கொண்ட அவர் பல நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். பத்ம பூஷண் விருது, சாகித்ய அகடமி விருதை என்பவற்றையும் பெற்றுள்ளார். மரணமடைந்த ஜெயகாந்தனுக்கு காதம்பரி, தீபலட்சுமி என்ற இரு மகள்களும், ஜெயசிம்மன் என்ற மகனும் உள்ளனர்.
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்-
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் தனது 90ஆவது வயதில் சென்னையில் நேற்று காலமானார். இறை அருள் பாடகர் என்றும் இசை முரசு என்றும் அவரது ரசிகர்களால் புகழப்பட்ட நாகூர் ஹனிபா, இஸ்லாமிய பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்களையும் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர். சென்னை கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்டிருந்த நாகூர் ஹனிபாவின் பூதவுடலுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி உட்பட பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதன் பிறகு ஹனிபா அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான நாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்டைதீவில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி-
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கைத்தீவு, மண்டைதீவு கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில் குருநகர், 2ஆவது ஒழுங்கையைச் சேர்ந்த சத்தியசீலன் ராஜீவன் (வயது 29) என்பவர் மரணமடைந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில், அந்த படகில் நால்வர் பயணித்துள்ளதாகவும் ஏனைய மூவரும் எவ்விதமான ஆபத்தும் இன்றி கரைதிரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பூட்டான் பிரதமர் இலங்கைக்கு விஜயம்-
பூட்டான் பிரதமர் சேரிங் ரொப்கேய் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று காலை 10.45அளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார். இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அவர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டே இலங்கை வந்துள்ளார். இவருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.