இந்தியா அரசாங்கத்தின் உதவியில் நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை

malayagam1malayagamஇந்தியா அரசாங்கத்தின் 500 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தை பார்வையிடுவதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சனிக்கிழமை விஜயம் செய்தார். டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானியின் அழைப்பிலேயே அவர் விஜயம் செய்தார்.இந்த புதிய கட்டடத்தை இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் மோடியினால் திறப்பதற்கு இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அது கைவிடப்பட்டது.

150 கட்டல்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டடத்தை மகாத்மா காந்தி என பெயர் வைப்பதற்கு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்துக்கு இந்திய தூதுவராலும் இலங்கை சுகாதார அமைச்சினாலும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த மாவட்ட வைத்தியசாலையை இந்திய அரசாங்கத்தினால் தற்போது மத்திய மாகாண சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதனால் உடனடியாக திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு சுகாதார அமைச்சு பதவியை வகித்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த கட்டடத்துக்கான அடிக்கல் வைக்கப்பட்டது.

இன்று இடம்பெற்ற இந்த விஜயத்தில் இலங்கைக்கான இந்திய பிரதி தூதுவர் ராதா வெங்கட்ராமன், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கம் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.