வலி வடக்கில் இரண்டாம் கட்டமாக காணிகள் கையளிப்பு..!! (படங்கள் இணைப்பு)
வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக வலி வடக்கில் இராணுவம் வசம் இருந்த பொது மக்களின் காணிகளில் ஒரு பகுதி (13.04.15) கடந்த திங்களன்று தெல்லிப்பளையின் வறுத்தலைவிளான் பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமது இடங்களை குடும்பத்துடன் வந்து பார்வையிட்டனர்.
எனினும் இன்று கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட தைஜிட்டி தெற்கு, மயிலிட்டி, வீமன்காமம் போன்ற பிரதேசங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதே நேரம் கையளிக்கப்பட்ட தங்கள் இடத்தை பார்வையிட்ட போது பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். அவர்களுடைய வீடுகள் இருந்த இடமே தெரியவில்லை மேலும் பாடசாலைகள், கோயில்கள் எல்லாம் அழிந்து அவர்கள் வாழ்ந்த ஊர் காடாய் காட்சியழித்தது. நமது போர் தந்த வடுவும் அதன் எச்சமும்