சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-

tytytytyytyytytytயாழ். சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் வருடந்த பரிசளிப்பு வைபவம் பாடசாலை மண்டபத்தில் அதிபர் நோபேட் உதயகுமார் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது இவ் நிகழ்வின்போது வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்நிகழ்வின் போது தவிசாளர் திருமதி. நகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, நீண்ட கொடிய யுத்தம் எமது சகல வளங்களையும் வாய்ப்புக்;களையும் இளக்க செய்த போதிலும் எம்மிடம் உள்ள கல்வி நிலையை எந்த எதிரியாலும் அழிக்க முடியாத நிலை காணப்பட்டது. எம்மிடம் உள்ள கல்வி நிலையின் தன்மையே இன்றைய எமது இருப்பிற்கான காரணம் என குறிப்பிட முடியும். இதற்கும் மேலாக மேலும் எமது கல்வி அறிவின் தன்மையை மேம்படுத்துவ மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. ஒரு மிக நீண்ட அழிவாயுத யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையில் இன்று அறிவாயுத யுத்தம் தொடுக்கபப் பட்டுள்ளது. இவ் மறைமுகமான போரில் நாம் வெல்வதற்கு

இன்னும் எமது மாணவச் செல்வங்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதறகு தயாராக இருக்க வேண்டும் இதிலும் சமூகம் வெறுமனே கல்விக் கூடங்களில் பொறுப்பை சுமத்தாது சமூகமாக இணைந்து கல்வி நிலையில் மேம்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் இது அனைவரதும் கூட்டு முயற்சியின் விளைவாக உருவாக்கப்பட வேண்டிய ஒர் நிலையாகவே கருத வேண்டும். ஒன்றிணைந்த முயற்சியின் விளைவாக எமது மாணவ சமூதாயதத்தினை மேன்மை பெறவைப்பது காலத்தின் கடமையாக உள்ளது. இதே வேளை இன்றைய இவ் நிகழ்வில் இப்பாடசாலையில் கல்வி பயின்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களை இவ் இடத்தில் கௌரவப் படுத்தியமை பெருமைக்குரிய ஒர் விடயமாகவே கொள்ள வேண்டும் இது மாத்திரம் அலலாது ஏனைய மாணவர்கட்கும் இது ஒர் முன் மாதிரியான செயலாகவே அமையும். இவ் மாணவர்களின் உயர்வு நிலை என்பது ஏனைய மாணவர்கட்கு வழிகாட்டலாக ஒர் தூண்டுதலாக அமையும் என்பது இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இவ்வாறான முன்னுதாரணமான நிலை ஒவ்வோர் இடத்திலும் ஏற்படும் சந்தர்ப்த்தில் மாணவர்கள் மத்தியில் ஒர் எதிர்கல இலக்கு ஏற்படுவதற்கு வழி வகுக்கும். இன்றைய மாணவர்களின் மனதில் ஒர் இலட்சியத்தினை அல்லது எதிர்கால இலக்கினை ஏற்படுத்துவதற்கு சிறந்த முன்னுதாரணங்களை ஏற்படுத்துவது ஒவ் வோர்வரதும் கடமையாகும். எனக் குறிப்பிட்டார். இவ் நிகழ்வில் பாடசாலைச் சமூகத்தினால் தவிசாளர் திருமதி நகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறித்த நிகழ்வில் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டாhர்.