Header image alt text

நூறு நாள் வேலைத்திட்டம்! தமிழ் மக்கள் திருப்திப்படக் கூடிய வகையில் எதுவுமே நடைபெறவில்லை-

sithadthanஆட்சிக்கு வந்த புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டம் முடிவடையவுள்ள நிலையில் தமிழ் மக்கள் திருப்திப்படக் கூடிய வகையில் எதுவுமே நடைபெறவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டம் தொடர்பில் ஊடகவியியலாளர்கள் யாழ் செயலகத்தில் வைத்து சித்தார்த்தன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இணைந்து ஆட்சி மாற்றத்தை வேண்டி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து புதிய ஆட்சியமைக்க பெரும் உதவியாக இருந்துள்ளனர். குறிப்பாக கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளின் வெளிப்பாடாகவே மக்கள் மாற்றத்தை வேண்டியிருந்தனர். இதனை ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்படுத்தி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தனர். இதனால் புதிய ஆட்சியொன்றும் அமைக்கப்பட்டது. அத்தோடு பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்திருந்தனர். இந்நிலையில், ஆட்சியமைத்த புதிய அரசும் நூறுநாள் திட்டம் என்று கூறி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இதில் தென்னிலங்கை மக்களுக்கு அரசாங்கம் பலதைச் செய்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையுமே செய்யவில்லை. Read more

வலி மேற்கு பிரதேச செயலகத்தினால் நூல் வெளியீடு-

rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrவலி மேற்கு பிரதேச செயலகத்தினால் பனுவல் எனத் தலைப்பிடப்பட்ட பிரதேச நூல் வலி மேற்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு அ.சோதிநாதன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வட மகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மறறும் கலாச்சார அமைச்சர் கௌரவ. குருகுலராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழவில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கல்வி அமைச்சரின் பிரதேச வருகையின் பொருட்டு சம்பிருதாயபூர்வமாக நிகழ்வில் கலந்து சிறப்பித்துக் கொண்டார்.

அர்ஜுன மகேந்திரன் மீண்டும் பணியில்-

arjuna mahendranசுமார் 5 வருட கால விடுப்புக்குப் பின்னர் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீண்டும் அலுவலகம் சென்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர்மீது குற்றம் சுமத்தப்பட்டதன் பின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அர்ஜுன மகேந்திரன் விடுப்பில் சென்றிருந்தார். விசாரணையில் மத்திய வங்கி ஆளுநர் பிணை முறி மோசடியில் நேரடி தொடர்புபடவில்லை என பிரதமர் நியமித்த விசாரணை குழு அறிவித்தது. இந்த நிலையில் அர்ஜுன மகேந்திரன் மீண்டும் அலுவலகம் திரும்பியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீன்பிடித்தலில் புதிய சட்டத் திருத்தம் அறிமுகம்-

tna (4)இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி இழுவை படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பான தனிநபர் சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் சமர்பித்துள்ளார். இந்த சட்டமூலத்தின் பிரகாரம் இலங்கை கடற்பரப்பில் இழுவை படகு பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் அளவில் இந்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றில் விவாதத்திற்கு வரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பசில் வேண்டுகோள்-

basilமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே மாதம் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தன்னை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு அதிகாரசபையை அவர் கோரியுள்ளார். எனினும், சிறைச்சாலை வைத்தியர், பசிலை சோதனை செய்த பின்னரே அவரது கோரிக்கை ஏற்கப்படுமென தெரியவருகின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க ஆகியோரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்குமூலம் வழங்க கோத்தபயவுக்கு கால அவகாசம்-

gotabaya......கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவின முன்னால் பிரசன்னமாகி இருந்தார். இதன்போது அவர் விசாரணைக்கு உட்படுத்துப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று தடையுத்தரவை பிறப்பித்திருந்த நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ஷ இன்று வாக்குமூலம் வழங்கியிருக்கவில்லை. தம்மை விசாரிப்பதற்காக அழைக்கப்பட்ட விடயம் பழைய விடயம் என்பதால், அது குறித்து ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், மேலும் கால அவகாசம் வழங்குமாறு ஆணைக்குழுவிடம் அவரின் சட்டத்தரணிகள் கோரினர். இதனை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டு கால அவகாசம் வழங்கியதைத் தொடர்ந்து அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது.

பம்பலப்பிட்டியில் பெண் கொலை, சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்-

killedகொழும்பு, பம்பலபிட்டி சென்ற் பீட்டர்ஸ் கல்லூரியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சென்ற் பீட்டர்ஸ் கல்லூரியின் களஞ்சிய அறையொன்றிலிருந்து அங்கு பணியாற்றும் பெண் சிற்றூழியரின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாடசாலையின் காவலாளியும், அப்பெண்ணை சந்திக்க வந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் அப்பெண்ணை சந்திக்கவந்த நபர் அவருடன் கள்ளத் தொடர்பை பேணி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் அழைப்புக்கமையவே அந்நபர் சம்பவ தினத்தன்று அங்கு வந்துள்ளதாகவும், இதன்போது இடம்பெற்ற வாய்த்தர்கத்தில் அப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

திருகோணமலை நகரசபை ஊழியர்களின் போராட்டம்-

aarpattam (2)திருகோணமலை நகரசபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில் குளறுபடிகள் காணப்படுவதாக தெரிவித்து நகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நகரசபை தலைவரால் தமது நியமனங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பதவி உயர்வுகளில் குளறுபடிகள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஊழியர்களின் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என திமலை நகரசபை தலைவர் க. செல்வராசா நேற்று கூறியிருந்தார்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி உதவியாளர்களின் ஒன்றியம் உதயம்-

8989898பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தின் பிரகாரம் 2005ம் ஆண்டு அரச சேவைக்கு உள்ளீர்ப்பு செய்து நிவாரணம், புனர்வாழ்வளிப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் அபிவிருத்தி உதவியாளராக நியமனம் செய்யப்பட்டு பல்வேறு அமைச்சு மாறுதல்களின் மூலம் தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பொருளாதார அமைச்சு என மாறுதல்கள் பெற்று தற்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கீழ் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு உள்வாக்கப்பட்டுள்ளோம் என்பதனைத் தங்களுக்குத் தயவுடன் அறியத்தருகின்றோம்.

எமக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு“10 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலைமையிலும்” சேவைப் பிரமாணங்கள் இயற்றப்படாத நிலையிலும் தற்போது யாழ் மாவட்டத்தில் 73 அபிவிருத்தி உதவியாளர்கள் உள்ள நிலையிலும் மாவட்ட பிரதேச செயலகங்களில் திட்டமிடல் கிளையில் மிகவும் பொறுப்புடன் இந்த மாவட்ட அபிவிருத்தி வேலைகளுக்கும் தேசிய ரீதியிலான வேலைத் திட்டங்களிலும் பெரும் பங்காற்றி வருகின்றோhம். Read more