20ஆவது திருத்தம் தமிழ், முஸ்லிம், மலையக தமிழ் பிரதிநிதித்துவக் குறைபாட்டை நீக்குவதாக அமைய வேண்டுமென வலியுறுத்தல்-
kumaranகொண்டுவரப்படருக்கும் 20ஆவது திருத்தம் ஒரு முக்கிய விடயம் என்பதால் இந்தத் திருத்தம் தற்போது இருக்கின்ற தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழர் பிரதிநிதித்துவக் குறைபாட்டை நீக்குவதாக அமையவேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொது செயலாளருமான சுசில் பிறேம ஜெயந்தை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து வலியுருத்தியுள்ளனர்.

தேர்தல் முறைமை சீர்திருத்தம் அல்லது மாற்றம் ஒன்று தேவை என இன்று  வலியுறுத்தப்படுகின்றது. அந்த அடிப்படையில் அது அரசியலமைப்பின்  20ஆவது திருத்தமாக கொண்டுவரப்பட இருக்கின்றது. அது எந்த வகையிலும் தமிழ், முஸ்லீம், மலையகத்த மிழர்களின் சனத்தொகை  விகிதாசாரத்திற்கேற்ப அமைய வேண்டும். தற்போதிருக்கின்ற முறையிலும் இதுவரை சமர்பிக்கபபட்டிருக்கின்ற பல்வேறு கட்சிகளின் முன்மொழிவுகளும் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப அன்றி போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை  கொண்டிருக்கவில்லை. 

ஆதலினால் கொண்டுவரப்படருக்கும் 20ஆவது திருத்தம் ஒரு முக்கிய விடயம் இந்தத் திருத்தம் தற்போது இருக்கின்ற தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழர் பிரதிநிதித்துவக் குறைபாட்டை நீக்குவதாக அமையவேண்டும். நல்லாட்சியை வலியுறுத்தும் அரசாங்கம் எமது அரசாங்கம் என சொல்லும் எமக்கு பாதகம் செய்துவிடக்கூடாது என்பதனாலேயும் இந்த சரியான தருணத்தில் தமிழ் தலைமைகள் அசமந்தமாக இருக்க முடியாது என்பதாலேயும் இதனை வலியுறுத்துகின்றோம் 

என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர்கள் கலாநிதி குமரகுருபரன், பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், அய்யாசாமி ராமலிங்கம் ,முரளி ரகுநாதன், சுப சுப்பிரமணியம் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் தேசிய அமைப்பாளரும் பொது செயலாளருமான சுசில் பிறேம ஜெயந்தவை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து வலியுருத்தியுள்ளனர். 

தாம் ஒருபொழுதும் இப்படி பாதிக்கும் வகையில் தவறு இடம்பெற அனுமதிக்க மாட்டோம் என சுசில் பிறேம ஜெயந்த உறுதியளித்தாரென ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.