சித்தன்கேணி தாவளை சைவத்தமிழ் பாடசாலை, வருடாந்த விளையாட்டு விழா-

565656555யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணியில் அமைந்துள்ள தாவளை சைவத்தழிழ் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது இவ் நிகழ்வு குறித்த பாடசாலையின் அதிபர் வ.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். முன்னதாக இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் உத்தியோகபூர்வமாக விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வின் இறுதியில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் உரையாற்றுகையில் இன்று பல சிறிய பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியளமானதாக அமைவது விளையாட்டு மைதானம் அற்ற நிலை ஆகும் இவ் விடயம் தொடாடபில் குறித்த அதிகாரிகள் ஊடாக அமைச்சுக்கு அறிவிப்பது மிக முக்கியமானது ஆகும் தற்போது பதவி ஏற்றுள்ள புதிய அரசின் 100 நாள் திட்டத்தினுள் இவ் விடயங்கள் அடங்கபட முடியும். இவ் விளையாட்டு என்பது மாணவர்கட்கு மிக இன்றி அமையாத ஒன்றாகவே உள்ளது. முழுமையாக கல்வி என்பது விளையாட்டுடன் கூடிய ஒன்றாகவே அமைய வேண்டும். வெறுமனே புத்தக கல்வி என்பது ஏற்றுக் கொள்ள முடியரது ஓன்றாகும். விளையாட்டு நிகழ்வுகளின்போது மாணவர்கள் பல விடயங்களையும் பெறக்கூடிய நிலை ஏற்படும் இதன் வாயிலாக பல அனுபவங்கள் மற்றும் தேர்ச்சிகளை மாணவர்கள் அடைய முடியும் இவ் பாடசாலை எமது பிரதேசத்தின் பழம் பெரும் பாடசாலை ஆகும் இவ் பாடசாலையில் நவாலியூர் சோம சுந்தரப் புலவர் கற்பித்தாக கூறப்படுகின்றது இவ் மகிமையாலேயே இவ் படசாலைக்கு எமது வட மாகாண கல்வி அமைச்சரை அழைத்துவந்து பாடசாலையைக் காண்பித்தேன் உதவுவதாக உறுதியளித்துளளார். என்னால் இயன்றவரை இவ் பாடசாலையின் வளர்ச்சிக்கான உதவிகளை வழங்குவதற்க தயாராக உள்ளேன். இப் பாடசாலைக்கு முன் பகுதியால் செல்லும் வீதி தொடர்பில் இவ் பகுதி மக்கள் பலரம் கூறியுள்ளனர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்