தந்தை செல்வாவின் 38ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு-

thanthaiதந்தை செல்வாவின் 38ஆவது நினைவு நாளான இன்றுகாலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா சதுக்கத்திலுள்ள நினைவிடத்தில் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் குழுத் தலைவர் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்களது தலைமையில் இந் நினைவுதின நிகழ்வு இடம்பெற்றது. சட்டத்தரணி கனகமனோகரன், தந்தை செல்வநாயகம் அவர்களின் புதல்வர் சந்திரகாசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மறவன்புலவு சச்சிதானந்தம், புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். நினைவுப் பேருiரையினை கனடாவிலிருந்து வருகைதந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சட்டத்தரணி திரு. கனகமனோகரன் அவர்கள் வழங்கினார்.