நேபாள மக்களுக்கு உதவ விரும்பும் சுகாதார பணியாளர்களுக்கு அழைப்பு

nepal helpநேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களைத் தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு உதவ விரும்புபவர்கள் 071- 24 92 484 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று நேபாள ஜனாதிபதி ராம் பெரன் யாதவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்களின் இரங்களை தெரிவித்தார். மேலும் இந்த துயரமான தருணத்தில் நோபளத்துடன் இலங்கை இணைந்திருக்கும் எனவும், இலங்கையால் முடிந்த உதவிகளை நேபாள மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரணில் விக்ரமசிங்க நேற்று நேபாளப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய வேளை, அந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தேவை என தெரியவந்துள்ளது. இதன்படி சேவையை வழங்க விரும்பும் சுகாதாரத் தொண்டர்கள் 071- 24 92 484 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.