Header image alt text

நேபாள நிலநடுக்கத்தில் 3218ற்கும் மேற்பட்டோர் பலி-

nepal quakeநேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3218 ஐத் தாண்டியுள்ளது. மேலும் நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய பனிச்சரிவுகளில் சிக்கி 17பேர் உயிரிழந்துள்ளனர். காத்மண்டுவில் குறைந்தது ஐந்து இடங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலகுவில் சென்றடைய முடியாத பல பிரதேசங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிலநடுக்கத்தின் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று ஊகிக்கப்படுகின்றது. நகர மத்தியில் உள்ள திறந்தவெளி மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். குடியிருப்புகளை இழந்தவர்களும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அஞ்சியவர்களுமாக பெருமளவிலானவர்கள், குளிரையும் ஈரத்தையும் தாங்கிக்கொண்டு இரவுப்பொழுதை வெளியிலேயே கழித்துள்ளனர். இயற்கைப் பேரழிவால் திணறுகின்ற நேபாள அரசுக்கு உதவுவதற்கு வெளிநாட்டுத் தலைவர்களுடன் தொண்டுநிறுவனங்களும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு சட்டமூலங்கள் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு-

courts (2)தகவல் அறிந்து கொள்ளும் சட்டம்மூலம் கணக்காய்வாளர் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுமீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது. சட்டமூலங்களை ஆராயவென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதிபதிகளான ரோஹன ரணசிங்க, பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் கொண்டு நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றில் இடம்பெறுவதால் அது முடிந்த பின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதனால் எதிர்வரும் நாள் ஒன்றில் மனு மீதான விசாரணை இடம்பெறும் என்றும் உயர் நீதிமன்றம் திகதி அறிவிக்குமென கூறப்படுகிறது.

சோபித்த தேரர் தலைமையிலான சத்தியாக்கிரகம் நிறைவு-

sofithar19வது திருத்தச் சட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை அடுத்து மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரம் நிறைவுக்கு வந்துள்ளது. 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல அமைப்புக்கள் இணைந்து இன்று காலை ராஜகிரியவில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்தனர். பொரளை கோட்டே வீதி என்.எம்.பெரேராவின் உருவச் சிலைக்கு அருகில் ஆரம்பமான பேரணி கொழும்பு சுதந்திர சதுக்கம் வரைசென்று அங்கு சத்தியாக்கிரம் இடம்பெற்றது.

ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் சரத்து நீக்கம்-

nimal19வது திருத்தச் சட்டத்தில் ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்பட்ட சரத்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று கூடியபோது விசேட உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த சரத்தின் மூலம் ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய வகையில் அமைந்திருந்ததாக நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

வலி மேற்கு பிரதேச சபையில் உலக குடிநீர் நிகழ்வுகள்-

dfddddஉலக குடி நீர் தினத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளில் வலி மேற்கு பிரதேச சபையின் கலச்சார மண்டபத்தில வேள்விசன் நிறுவனத்தின் அனுசரணையில் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது பிரதேச பாhடசாலை மாணவர்களில் கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்பு மாணவர்கட்கு நீர் தொடர்பிலான விழிப்புணர்வு மற்றும் நீர் மாசுறுதல் மற்றும் அவற்றை தடுக்கும் வழி முறைகள் என்பன தொடர்பில் கருத்துப் பகிர்வு இடம்பெற்றது இவ் நிகழ்வில் நீர் சபையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு செய்முறை மற்றும் ஏனைய வழிகளிலும்; கருத்துப் பகிர்வை வழங்கினர்.

யாழ் ஊடகவியலாளருக்கு தொடர்ந்து விளக்கமறியல்-

courtsயாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளரை தொடர்ந்தும் மே 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது எனினும் அவருடன் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட்ட மூன்று பேரும் ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் குழப்பம் விளைவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு பிணை வழங்க காவல்துறையினர் எதிர்ப்பு வெளியிட்ட கரணமாகவே நீதிமன்றம் அவரின் விளக்கமறியல் காலத்தை நீடித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய ராணுவத் தளபதியின் விஜயம் ஒத்திவைப்பு-

indian armyஇந்திய ராணுவத் தளபதி ஜெனரல் டள்பீர் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தரைப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நட்புறவு மற்றும் அன்னியோன்னிய ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவிருந்தது. எனினும், அவசர நிலைமைகளை கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக நிவாரண பணிகளில் இந்திய ராணுவத் தளபதி பங்களிப்பு செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

nepal nepalநேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 இனையும் தாண்டியுள்ளது. இதுவரை 3,218 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ் அனர்த்தத்தில் 6,500 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ முகவராண்மையை மேற்கோள்காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. நேபாளம் மட்டுமன்றி இந்தியா மற்றும் பங்களாதேஷிலும் நில நடுக்கத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பலர் தமது இருப்பிடங்களுக்கு செல்ல பயந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா கபடிப் போட்டியில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் வெற்றி-

fgfgfffவவுனியா பிரதேச 27ஆவது இளைஞர் விளையாட்டு விழாவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நேற்று 26.04.2015 ஞாயிற்றுக்கிழமை கபடி மற்றும் எல்லே போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியில் உதயதாரகை அணியினை வெற்றி கொண்டதன்மூலம் தமிழ் தேசிய இளைஞர் கழகம் சம்பியனானது. கோவில்குளம் இளைஞர் கழகம் பெயர் மாற்றப்பட்டு தற்போது தமிழ் தேசிய இளைஞர் கழகமாக செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.