19 வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்-

parliamentநல்லாட்சி அரசாங்கத்தின் 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் மீதான 3ஆம் வாசிப்பு நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குழுநிலை விவாதத்தின் பின்னரான இறுதி வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 212 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன. பிரேரணைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்துள்ளார். இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரேமலால் ஜயசேகர, சுசந்த புஞ்சிநிலமே, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், ஜனக பண்டார, மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட7பேர் சபையில் பிரச்சனமாகியிருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நேபாளத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு-

nepal quakeநேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களை நினைவு கூறும் முகமாக மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நேபாள நிலநடுக்கத்தில் சுமார் 5ஆயிரம் பேர்வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புகள் அவற்றை விஞ்சியுள்ளதாக நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை, இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் உள்ளிட்ட நேபாளத்தின் நட்பு நாடுகள் அங்கு இடம்பெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவி வருகின்றன. ஹிமாலயப் பிரதேசத்தில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக நேபாள பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அடைமழை காலநி;லையையும் பொருட்படுத்தாது நேபாள மக்கள் திறந்த வெளிகளில் கூடாரங்கள் மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர் உள்ளிட்ட 8 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்-

courtsஇலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 8 பேருக்கு இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளில் 9வது நபரான பிலிப்பீன்ஸ் பெண்ணொருவருக்கு இறுதிநேரத்தில் மரணத்தண்டனை பிற்போடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமை பெற்ற மயுரன் சுகுமாரன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவிற்கான தூதுவரை அவுஸ்திரேலியா மீளழைத்துள்ளது. இந்த சம்பவம் கொடூரமானதும், அனாவசியமான செயற்பாடு எனவும் ஆஸி பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-

aarpattam (2)தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. பட்டதாரி கல்வி நெறி நிறைவடைந்து சுமார் 4ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதிலும் இதுவரை தமக்கு எவ்வித நியமனங்களும் கிடைக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர், மாகாண ஆளுநர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. வட மாகாண பட்டதாரிகள் சங்கத்தினரின் குற்றச்சாட்டுக்கள் குறித்து வட மாகாண முதலமைச்சின் இணைப்புச் செயலாளர் எஸ் சண்முகப்பிரியன் கூறுகையில், மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்புகளுக்கு அமைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடர்ந்தும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் இணைப்புச் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மேயர் கைது-

hampantota mayorஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் கைதில் இருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் தொடர்ந்தும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ, விசேட பொலிஸ் விசாரணை குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டே அவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை பலவந்தமாக கடத்தியது, ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் விசாரணை-

police ...வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் வீரசிங்கஹ மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் அமரசேகர ஆகியோரிடம் நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலேயே இவ்விருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன