சிதம்பரபுரம் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகம் நிதியுதவி-
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடா கிளையினரால் வழங்கப்பட்ட சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுக்கான சீருடைகளை தயார் செய்வதற்கான ஒருதொகைப் பணம் கற்குளம்-1, மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி நிர்வாகத்திடம் இன்று (30.04.2015) வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் திரு க.சிவநேசன்(பவன்), திரு இ.மகேந்திரன் (ஐயா) சிரேஷ்ட உறுப்பினர்-புளொட்), தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன், முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி எஸ்.கஸ்தூரி, செல்வி பி.ஜனார்த்தனி, கற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு மாதவன், முகாமைத்துவ குழு தலைவி திருமதி த.சுஜனந்தினி, மகளிர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி கி.துசாந்தினி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் (புளொட்) இணைந்து தமிழ் தேசிய இளைஞர் கழகம் பல உதவிகளை சிதம்பரபுரம் மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.