Header image alt text

கிளிநொச்சி மாணவியை காணவில்லையென முறைப்பாடு-

vidhushaகிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு சென்று, தாயைச் சந்தித்துத் திரும்பிய மாணவி, இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்றுவருகின்றார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்-

policeசேவையின் தேவை கருதி உடன் அமுலாகும் வகையில் நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் புள்ளிவிபர பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாளிகாவத்தைக்கு மாற்றப்பட்டுள்ளார். பதுரளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹபராதுவைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேநேரம் பொலிஸ் புள்ளிவிபரபிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த கே.பி.விஜேமான்ன வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்துடன் பகமுன பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி முல்லியாவெலி பொலிஸ் நிலையத்துக்கும் பொலனறுவை காவற்துறை பிரிவின் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக இருந்த என்.ஏ.குணவர்ன பகமுன பொலிஸ் நிலையத்தின் தற்காலிக பொறுப்பதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமது காணிகளுக்குள் மக்கள் செல்வதற்கு தடை-

muthurதிருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் மக்கள் உள்நுழைவதற்கு பொலிஸார், நேற்று தடை விதித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி பொலிஸார் உள்நுழைவுத் தடை உத்தரவை அறிவித்தததையடுத்து, அங்கு துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருந்த காணிகளின் உரிமையாளர்களும் உள்ளுர் மக்களும் தற்போது வெளியேறியுள்ளதாக தெரியவருகின்றது இதன் காரணமாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதற்கோ வெளியார் நுழைவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. காணிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் கூடாரங்களும் மக்களால் அகற்றப்பட்டுள்ளன. நேற்றுமுதல் இடம்பெயர்ந்த மக்கள் அந்த பகுதிக்குள் செல்வதில்லை. 9 வருடங்களின் பின்னர், தமது பூர்வீக காணிகளில் விரைவான மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்திருந்த சம்பூர் பிரதேச மக்கள் கடந்த ஒருவார காலமாக காடுகள் அடர்ந்து போய்க் கிடக்கும் தமது காணிகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

4ஆயிரத்து 200அகதிகள் ஒரேநாளில் மீட்பு-

refugeesமத்தியதரை கடல் பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படும் 4,200 சட்டவிரோத குடியேறிகளை காப்பாற்றும் முயற்சியில், இத்தாலிய கரையோர காவல்படையினர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்படையினர் கடலில் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின்போது 17 சடலங்களை கண்டுள்ளனர். சடலங்களுடன் இருந்த 300க்கும் அதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலங்கள் கடல் பயணத்திற்கு ஏற்றதல்லாத வசதியற்ற சிறிய படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பது குறித்து கடற்படையின் பேச்சாளர் தகவல்களை வெளியிடவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்பிரல் 12ஆம் திகதி முதல் மே மாதம் 2ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் 3,791 சட்டவிரோத குடியேறிகளை இத்தாலிய கரையோர காவல்துறையினர் மீட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987-

smokigஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

சுவிசில் அமரர் சிறீ சபாரட்ணம் உட்பட ரெலோ போராளிகளின் நினைவுதினம் அனுஷ்டிப்பு, மாணவி வித்தியாவுக்கும் அஞ்சலி-

ffffதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) சர்வதேச செயலகத்தினால் சுவிஸ்லாந்தின் சொலத்தூண் மாவட்டத்தில் ரெலோ செயலாளர் நாயகம் அமரர் சிறீ சபாரட்ணம் அவர்கள் உட்பட உயிர்நீத்த ரெலோ இயக்கப் பேராளிகளின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று (30.05.2015) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது உயர் நீத்தவர்களுக்காக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி மற்றும் மலர் அஞ்சலி என்பன இடம்பெற்றன.ரெலோ தோழர் திரு.சேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், ரெலோ தோழர் திரு.செல்வா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இதன்போது திரு.துளசீஸ்வர சர்மா, ரெலோ தோழர் ஞானம், வைத்தியர் திரு. ரூபன், மூத்த ஊடகவியலாளர் திரு. சண் தவராஜா மற்றும் திரு.சுவிஸ் ரஞ்சன் ஆகியோர் உரையாற்றினார்கள். முதலில் உரையாற்றிய திரு.துளசீஸ்வர சர்மா அவர்கள் உரையாற்றும் போது, ” இறந்தவர்களை நினை கூர்வது தவிர்க்க முடியாதது எனவும், அவர்களின் நினைவு கூறலானது, அவர்கள் விட்டுச் சென்ற இலட்சியத்தை முன்னெடுப்பதே” எனவும் குறிப்பிட்டார்.

Read more

சங்குவேலி விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான விதைகள் வழங்கல்-

sfdfddயாழ். சங்குவேலி விவசாய சம்மேளனத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தினை ஆரம்பிப்பதற்காக “நாங்கள்” என்ற அமைப்பு இன்று (30.05.2015) பயிர்ச் செய்கைக்கான விதைகளை விநியோகித்து உதவியுள்ளது. “நாங்கள்” அமைப்பின் செயலாளர் திரு. பிரதாப் மற்றும் அவ் அமைப்பின் அங்கத்தவர் அனுசன் ஆகியோர் பயிர்க்களுக்கான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிவைத்தார்கள். இளைஞர் சம்மேளனத்தின் வட மாவட்டத் தலைவர் திரு. விஜிதரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். Read more

நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிடம் திறந்துவைப்பு-

neliyadiயாழ். நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிட திறப்பு விழா அண்மையில் தவிசாளர் வியாகேசு தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கலந்து சிறப்பத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more

தாயகத்து உறவுகளை தலைநிமிர வைப்போம்-

ddபிரான்சை தளமாக கொண்டு இயங்கும் ரி.ஆர்.ரி தழிழ் வானொலியின் அனுசரனைக்கூடாக வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயகத்து உறவுகளைத் தலை நிமிர வைப்போம் என்ற செயல் திட்டத்தில் குறித்த வானொலிக்கூடாக இணைந்து கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி. லாலாரவி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிதியூடாக வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வட்டு கிழக்கு சித்தன்கேணியில் வசிக்கும் திருமதி.பி.சந்திரமாலா என்ற போரில் மிகக்கடுமையான பாதிப்புக்களோடு வாழும் பெண்ணுக்கு அவரது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு கூரைத்தகடுகள், கம்பிவலைகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் 30.05.2015 அன்று குறித்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று வழங்கி வைத்தார். குறித்த பெண்மணி தற்போது மேற்படி வீட்டில் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார். Read more

சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்-

maithripala3சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஜீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாலித பிரணாந்து, எஸ்.அனில் சில்வா, மனோஹார டி சில்வா, பேராசிரியர் ஹர்ஷ கபில்ராஜ், இக்ரம் மொஹமட், சஞ்ஜீவ பிரனீத் ஜெயராஜ் ஆகியோரும் சட்டத்தரணிகளான பேராசிரியர் லக்ஷமன் மாரசிங்க, தாரணி எஸ்.விஜேதிலக, பேராசிரியர் காமிலா குணரத்ன, எம்.சுவாமிநாதன், என்.செல்வக்குமார், நவீன் சரத்மாரப்பன, திசாத் விஜேகுணவர்த்தன, ஜீ.ஜீ.அருள்பிரகாசம் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை 2015ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்-

cpaமறுசீரமைப்பு மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு பொறிமுறை ஆரம்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேசிய ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இவை எவ்வாறு செயற்படவுள்ளன, அதன் கால எல்லை மற்றும் உள்ளடக்கப்படவுள்ள பிரதேசம் போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அவ்வாறான தகவல்களை அரசாங்கம் மக்களுக்கு அறியச் செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணை-

newsகடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை, கோட்டே நாக விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டார். அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ஆதரவு வழங்கிய அணிகளை, ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் மறந்து விடுவது வழமையான சம்பிரதாயம் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததுடன், ஆட்சிக்கு வந்த பின்னரும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அந்த அணிகள் முன் நின்று செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் 14 நாட்களில் 10 மாணவிகள் துஷ்பிரயோகம்-

radhakrushnanகடந்த 14 நாட்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் சில சம்பவங்கள் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதற்கமைய கடந்த இரு வாரங்களில் இடம்பெற்றுள்ள இச் சம்பவங்களில் 10 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழில் அமைச்சர் ஜெனீவாவிற்கு விஜயம்-

dfddஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச தொழில் சம்மேளனத்தில் பங்கேற்கும் நோக்கில் இன்றுமாலை தொழில் அமைச்சர் நாவின்ன ஜெனீவா புறப்பட்டுச் செல்ல உள்ளார். தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு ஊடக அறிக்கையின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பளங்கள் குறித்து அமைச்சர் விசேட உரையாற்ற உள்ளார். சர்வதேச தொழில் சம்மேளனத்தில் சுமார் 185 நாடுகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நாரந்தனையில் இளைஞன் மீது வாள்வெட்டு-

knifeயாழ். நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த குழு, இளைஞன்மீது வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் எஸ்.சசிகரன் என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக உறவினர்கள், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழாலை வடக்கில் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

IMG_2110 (1)யாழ். ஏழாலை வடக்கு கிராம முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (28.05.2015) ஏழாலை கிராம முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விக்கினரஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. ஏழாலை வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் லண்டனில் வசிக்கின்ற நல்லதம்பி சற்குணநாதன் தம்பதிகளால் சுயதொழில் முயற்சிக்ககான உதவிகளும், கணனி மற்றும் தையல் வகுப்புக்களுக்கான உதவிகளும் வழங்கப்பட்டன. இதன்கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ்ப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு கோழி வளர்ப்புக்கென கோழிக்கூடு உள்ளிட்டவைகளும், கணினி பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்குரிய கணனிகளும் தையல் பயிற்சி ஏற்பாடுகள் மற்றும் அதற்கான தையல் இயந்திரங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினர்கான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் தவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வினைத் தொடர்ந்து நன்றியுரையினை ஏழாலை வடக்கு கிராம முன்னேற்றக் கழகத்தின் உபதலைவர் திரு வரதராஜன் அவர்கள் ஆற்றினார். இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more

அமைச்சரவைக்கு ஐவர் நியமனம்-

news ministersஅமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவர் என ஐவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

1.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர்
2.பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்.
3. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுற்றாடல்துறை இராஜங்க அமைச்சர்.
4. ஹேமல் குணசேகர-வீடு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர்.
5. சந்திரசிறி சூரியாராச்சி- காணி பிரதியமைச்சர்.

நோர்வே உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

norwayஇலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிறேட் லோசன் இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையங்கள் குறித்து அரச அதிபரிடம் கேள்வி எழுப்பியதுடன், வலி. வடக்கு வரை படத்தினையும் பார்வையிட்டுள்ளார். பின்னர் மாலை 03.00 மணிக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

வடமாகாணத்தில் பொலிஸ{க்கு ஆட்சேர்ப்பு-

police ...வட மாகாணத்தில் நிலவும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக பொலிஸ் உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் கான்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதியவர்களை பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ் திணைக்களத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜயசிங்க தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வட மாகாணத்தில் தற்போது சேவையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை போதாமல் உள்ளது.

Read more

வேள்ட் விசன் உதவியுடன் வலிமேற்கில் நூலகத் திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)

kkkவலி மேற்கு பிரதேசத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தின் உதவியுடன் 10 நூலகங்கள் திறக்கப்பட்டன. இதன்படி அண்மையில் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் இவ் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வின்போது சம்பத் வங்கியினர் குறித்த நூலக பயன்பாட்டிற்கு தளபாடங்களையும் வழங்கினர். இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது இன்று மாணவர்கள் மத்தியில் நூலகஙகளுக்கு சென்று வசிக்கும் நிலை குறைவடைந்து வருவது அவதானிக்க கூடியதாக உள்ளது இவ் நிலையில் ஒர் அதிகரித்த நிலையை உருவாக்கவே இவ்வாறான செயல் திட்டம் முன்வைக்கப்படுகின்றது. இதேவேளை மாணவர்களின் வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க வேண்டிய நிலையை உயர்த்துவதற்கு எல்லோரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

Read more

ஜனாதிபதி அவர்களின் நற்செயலை தமிழர் விடுதலைக் கூட்டணி பாராட்டுகின்றது

werrஅன்போடு வளர்க்கப்பட்டு, பாடசாலைக்குச் சென்ற 17 வயது மாணவி வித்தியா கடத்தப்பட்டு, பலரால் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு, மிருகத்தனமாக முறையில் கொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவியின் வீட்டாருக்கு, சம்பிரதாயங்களை மீறி அமைச்சர்கள் எவரின் உதவியுமின்றி, தன்னந்தனியாக யாழ்ப்பாணம் சென்று, நேரில் தன்சார்பிலும், தன் அரசு சார்பிலும் அனுதாபம் தெரிவித்து வந்த மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் செயற்பாட்டை, வெகுவாக நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். எமது காலத்தில் நடந்தேறிய குற்றச் செயல்களில் அதிகளவிலான, கொடூரமான செயல் இதுவாகும். நாட்டு மக்கள் இன, மத பேதமின்றி சகல துறைகளையும் சேர்ந்தவர்கள், பல்வேறு வயதுடைய ஆண் பெண் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரும் நாடளாவியரீதியில் கிளர்ந்தெழுந்து தமது ஒற்றுமையையும், ஆதங்கத்தையும் இந்த கொடூர செயல்களான கடத்தலோடுகூடிய பலரின் வன்புணர்வு, படுகொலை ஆகியவற்றை பலவகையான செயற்பாடுகள் மூலம் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டினர். இனமத பேதமின்றி, நாட்டவர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டமை, உலக நாடுகளாலேயே நம்ப முடியவில்லை.

Read more