Header image alt text

சூரிச்சில் நடைபெற்ற மாபெரும் மே தின ஊர்வலத்தில் புளொட்டும் பங்கேற்பு- (படங்கள் இணைப்பு)

plote may day15 - 18.சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடாத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். காணாமற் போனவர்கள் விடயத்தில் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே, அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் உள்ளிட்ட பல கோஷங்கள் எழுப்பப்பட்டன. Read more

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேதினக் கொண்டாட்டம் – யாழில் (படங்கள் இணைப்பு)

may_day_jaffna_13நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்திலிருந்து உலக தொழிலாளர் தினத்தை நினைவுபடுத்தும் ஊர்திகள் சகிதம் பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமான தொழிலாளர் தின ஊர்வலம்; வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து  வைக்கப்பட்டது.
அங்கிருந்து பருத்துறை வீதி ஊடாக நல்லூர் ஆலயத்தை அடைந்து, பின்னர் ஆரியகுளம் சந்தியை அடைந்து, யாழ். நகருக்குள் வந்து காங்கேசன்துறை வீதி ஊடாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.
வீரசிங்கம் மண்டபத்தில் தொடர்ந்து உலக தொழிலாளர் தினத்தை ஒட்டிய எழுச்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் வடமாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் எழுச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். மேற்படி கூட்டம் மாலை 6 மணிவரையில் நடைபெற்றது. Read more

வட மாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன்(பவன்) நியமனம்-

K.Sivanesan Bavanவட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (பவன்) தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள்-

unpஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மே தின கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஐக்கிய மே தின பேரணி மூன்று பகுதிகளில் இருந்து ஆரம்பமானது. லிப்டன் சுற்றுவட்டம், டார்லி வீதி – தீயணைப்புப் பிரிவுக்கு அருகில் இருந்தும் டோசன் வீதியிலிருந்தும் ஆரம்பமாகிய பேரணிகள் ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைந்தன. மேதினக் கூட்டத்தின்போது 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சில யோசனைகளும் நிறைவேற்றப்பட்டன. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் ”உழைக்கும் சக்திக்கு பச்சை சமிக்ஞை” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. மாளிகாவத்தை ப்ரதீபா மாவத்தைக்கு அருகிலிருந்து பேரணியாகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து கொண்டனர். மேலும் சில பேரணிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியுடன் இணைந்ததன் பின்னர், சங்கராஜ சுற்றுவட்டம், மருதானை சந்தி, பொரளை சந்தி, பேஸ்லைன் வீதி ஊடாக கெம்பல் மைதானம் வரை அவை பயணித்தன. இந்த பேரணியின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் மே தினக்கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் மே தின கொண்டாட்டங்கள்

east-tna-may-07வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பலவும் மே தின கொண்டாட்டங்களை இன்று ஏற்பாடு செய்திருந்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின கூட்டம் யாழ். பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மே தினக் கூட்டம் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் நடைபெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் மே தின நிகழ்வுகள் வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது. ஆத்துடன் மலையகத்தின் பல பகுதிகளிலும் மேதினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன ஐக்கிய தொழிற் சங்கத்தின் மேதினக் கொண்டாட்டங்கள் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் மக்கள் கலந்து சிறப்பித்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் முத்து சிவலிங்கம் தலைமையில் தலவாக்கலையில் இடம்பெற்றது. தலாவக்கலை நகரிலிருந்து மேதினப் பேரணி தலவாக்கலை நகரசபை விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்தது. பெருந்திரளான மக்கள் மோதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம்-

trinco_may_002trinco_may 7trinco_may_006

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்றது. திருமலை சிவன் கோயில் சந்தியில் ஆரம்பமான மேதினப் பேரணி திருமலை கடற்கரையிலுள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்குவரை சென்றடைந்தது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து மேதின உரை இடம்பெற்றது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேதினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஆரம்பமான பேரணி பிரதான வீதியூடாக கல்லடி துளசி மண்டபத்தை அடைந்தது. இந்நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைஉறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரேமதாஸவின் நினைவு தினத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

premadasaமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஏழை மக்களுக்காக பாரிய சேவையை செய்த ஒரு தலைவர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 22வது நினைவு தினம் இன்றாகும். இதன் நிமித்தம் புதுக்கடை பகுதியிலுள்ள அன்னாரின் சிலைக்கு அருகில் ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது. ரணசிங்க பிரேமதாஸவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொள்ளும் முதலாவது ஜனாதிபதி தான் என இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன கூறினார். இதேவேளை பிரேமதாஸ இனபேதங்களுக்கு எதிராக செயற்பட்ட தலைவர் என இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அத்துடன், பிரேமதாஸ இறந்த போது யாழ்ப்பாணத்திலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு மக்கள் சோகத்தை வெளிப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பிரேமதாஸ எதிர்பார்த்த சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் ஆட்சி தற்போது உண்மையாகியுள்ளதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தில் 700 குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரமும், 1,100 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டன.

விமான நிலையத்தில் இரு தமிழ் இளைஞர்கள் கைது-

arrest (30)வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்றபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர் என தெரியவருகின்றது. இவர்கள் டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டு விமான நிலையம் வந்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களை தயாரிப்பதற்காக ஒரு இளைஞனிடமிருந்து 35 இலட்சம் ரூபாவை முகவர் ஒப்பந்தம் பேசியதாகவும் இத்தாலிக்கு சென்றபின் அப்பணத்தை தருவதற்கு அவ்விளைஞர்கள் இருவரும் முகவருக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தில் இலங்கையர்கள் ஐவருக்கு சிறை-

jail.......புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ஐவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து, ஹேக்கில் உள்ள நீதிமன்றமே நேற்று இந்த சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இவர்கள் இருந்துள்ளனர். 2003ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டி சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது.

19ம் திருத்தச் சட்டத்துக்கு அமெரிக்கா வரவேற்பு-

F19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு, அமெரிக்கா வரவேற்பை தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் இணைப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச்சட்டம் கடந்த 28ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக இதனை அமெரிக்கா பார்ப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் இணைப் பேச்சாளர் மேரி ஹாப் மேலும் கூறியுள்ளார்.

சோமவன்ச அமரசிங்க உண்ணாவிரதம்-

somawansaமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கஉண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இதனை அவர் முன்னெடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். சோமவன்ச அமரசிங்க அண்மையில் ஜே.வி.பி. இல் இருந்து விலகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு பற்றிய அறிவித்தல்-

veadkai invitation