தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம்-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்றது. திருமலை சிவன் கோயில் சந்தியில் ஆரம்பமான மேதினப் பேரணி திருமலை கடற்கரையிலுள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்குவரை சென்றடைந்தது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து மேதின உரை இடம்பெற்றது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேதினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஆரம்பமான பேரணி பிரதான வீதியூடாக கல்லடி துளசி மண்டபத்தை அடைந்தது. இந்நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைஉறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.