வட மாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன்(பவன்) நியமனம்-

K.Sivanesan Bavanவட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (பவன்) தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள்-

unpஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மே தின கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஐக்கிய மே தின பேரணி மூன்று பகுதிகளில் இருந்து ஆரம்பமானது. லிப்டன் சுற்றுவட்டம், டார்லி வீதி – தீயணைப்புப் பிரிவுக்கு அருகில் இருந்தும் டோசன் வீதியிலிருந்தும் ஆரம்பமாகிய பேரணிகள் ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைந்தன. மேதினக் கூட்டத்தின்போது 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சில யோசனைகளும் நிறைவேற்றப்பட்டன. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் ”உழைக்கும் சக்திக்கு பச்சை சமிக்ஞை” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. மாளிகாவத்தை ப்ரதீபா மாவத்தைக்கு அருகிலிருந்து பேரணியாகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து கொண்டனர். மேலும் சில பேரணிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியுடன் இணைந்ததன் பின்னர், சங்கராஜ சுற்றுவட்டம், மருதானை சந்தி, பொரளை சந்தி, பேஸ்லைன் வீதி ஊடாக கெம்பல் மைதானம் வரை அவை பயணித்தன. இந்த பேரணியின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் மே தினக்கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் மே தின கொண்டாட்டங்கள்

east-tna-may-07வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பலவும் மே தின கொண்டாட்டங்களை இன்று ஏற்பாடு செய்திருந்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின கூட்டம் யாழ். பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மே தினக் கூட்டம் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் நடைபெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் மே தின நிகழ்வுகள் வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது. ஆத்துடன் மலையகத்தின் பல பகுதிகளிலும் மேதினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன ஐக்கிய தொழிற் சங்கத்தின் மேதினக் கொண்டாட்டங்கள் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் மக்கள் கலந்து சிறப்பித்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் முத்து சிவலிங்கம் தலைமையில் தலவாக்கலையில் இடம்பெற்றது. தலாவக்கலை நகரிலிருந்து மேதினப் பேரணி தலவாக்கலை நகரசபை விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்தது. பெருந்திரளான மக்கள் மோதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.