ஜோன் கெரி தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு-

johnஇலங்கை வந்துள்ள அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தற்சமயம் ஏற்பட்டுள்ள சிறந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோன் கெரி தமிழ் தேசிய கூட்டமைப்பை கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஜோன் கெர்ரி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்றுமுற்பகல் 11.40அளவில் அவரது விசேட விமானம் நாட்டிலிருந்து கென்யா நோக்கி புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை இலங்கை வந்த அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை முதலில் சந்தித்திருந்தார். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமா ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் சந்திப்பை நடத்தியதுடன், இன்றுகாலை அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்திருந்தார்.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் விடுதலை-

jailவெசாக் போயா தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பின் கீழ், நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து சிறு குற்றங்கள் புரிந்த 488 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறுகுற்றம், தண்டப்பணம் செலுத்த தவறிய கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 8 பேரும் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 70 வயதினை கடந்தவர்களும், அபராதம் செலுத்த முடியாதவர்கள் மற்றும் சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர்களும் வெசாக் பூரணையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார கூறியுள்ளார். எவ்வாறாயினும், போதைப்பொருள், கொலை உள்ளிட்ட பாரிய குற்றங்கள் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையாளர் ஓய்வு-

mahindaதேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதியுடன் 60 வயதை பூர்த்தி செய்வதோடு, அவரது பதவியில் இருந்தும் ஓய்வுப் பெறவேண்டும். அவர் தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்க விரும்பினால் முன்னரே அதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். எனினும், அவர் இதுவரை அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்படவுள்ளது. சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையாளரின் அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கீழ் வரவுள்ளது. எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய தேர்தல் ஆணையாளர் தனது பதவிக் காலத்தை 65வயது வரை நீடித்துக்கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.