மாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா கௌரவிப்பு- (படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்குமான ஆசன பங்கீட்டில் புதிய சுழற்சிமுறை மாகாண சபை உறுப்பினரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் திரு எம்.பி.நடராஜா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (10.05.2015) வவுனியா நகரசபை மண்டபத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மாவை சேனாதிராஜா, கௌரவ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு சி.பாஸ்கரா அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். இந்திய பிரதித் தூதர் கௌரவ எஸ்.டி.மூர்த்தி அவர்களும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர். விசேட விருந்தினர்களான முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு வை.பாலச்சந்திரன், வட மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன், ரவிகரன், சிவமோகன், தியாகராஜா, இந்திரராஜா, க.சிவநேசன்(பவன்), ஜி.ரி லிங்கநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் க.சிவலிங்கம், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் சேனாதிராஜா வவுனியா தெற்கு கல்விவலய பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.