நேபாள நிலநடுக்கத்தில் இலங்கை தூதரகத்திற்கு சேதம்-

nepalநேபாளத்தில் இன்றுபகல் 12.40அளவில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே அகற்றப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 25ம் திகதி நேபாளத்தில் இடம்பெற்ற 7.8 ரிச்டர் அளவு நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று நேபாளத்தின் மேற்கு பகுதி சீனாவின் எல்லையில் நிலத்துக்கு அடியில் 18.5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்ரமசிங்க காலமானார்-

niranjan ministerசட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்ரமசிங்க சுகயீனம் காரணமாக காலமானார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நிரஞ்சன் விக்ரமசிங்க மாரடைப்பு ஏற்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார். 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளுமன்றுக்குத் தெரியான நிரஞ்சன் விக்ரமசிங்க கடந்த மாதம் 23ம் திகதி சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சராக பதவியேற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. காலமடைந்த பிரதியமைச்சர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் – யானை மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயம்-

accident elephantதம்புள்ளை – ஹபரன பிரதான வீதியில் மீகஸ்வௌ பிரதேசத்தில் இன்று அதிகாலை பஸ் ஒன்று யானைமீது மோதியதில் இடம்பெற்ற விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 9 பயணிகள் காயமடைந்து ஹபரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மூவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கும் இருவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஹபரன – ஹிரிவடுன பகுதியில் அதிகாலை 2மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது காயமடைந்த யானை காட்டுக்குள் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொலன்னறுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்சில் பயணித்தவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹபரன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தியவதன நிலமேயிடம் விசாரணை, கோட்டாபய பிறிதொரு திகதி கோரல்-

diyavadanaகண்டி தலாதா மாளிகையின் தியவதன நிலமேயான பிரதீப் நிலங்க தெல பண்டாரவிடம் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலதா மாளிகையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவுக்கு தன்னால் இன்று சமூகமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிப்பதற்காக மற்றுமொரு தினத்தை ஒதுக்கி தருமாறும் கோரியுள்ளார்.

நேபாளத்திலிருந்து இலங்கை இராணுவக்குழு நாடு திரும்பியது-

nepal................நேபாள நில அதிர்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் சென்ற இலங்கை இராணுவத்தினர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளனர். அங்கு சென்ற 142 ராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளதாக ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உணவு மற்றும் மருந்;து ஆகியனவற்றுடன் சுமார் 17 தொன் எடைகொண்ட பொருட்களை ஏற்றிய வானுர்தி ஒன்று நேற்று காட்மண்டுவுக்கு சென்றது. இந்நிலையில், அந்த வானூர்தியிலேயே இலங்கை படையினர் நாடு திரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவுசர் பௌசி பிணையில் செல்ல அனுமதி-

fausi sonஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் நவுசர் பௌசி, கொழும்பு குற்றவிசாரணை பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டார். நவுசர் பௌசியை கைதுசெய்து நீதிமன்றில் முன்னி;லைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, கொழும்பு குற்றவிசாரணை பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பிரதேச காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நேற்று உத்தரவிட்டிருந்தார். 2011இல் கொழும்பு டொரிங்டன் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாகவே அவர்மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. நவுசர் பௌசி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் புதல்வராவார். ஐகதான நவுசர் பௌசி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி, அவருக்கு 10ஆயிரம் ரூபா ரொக்க பிணையும், 10 லட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் 1ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

இலங்கைக்கு தாதி பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை-
maiththiriஇலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைதினம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது தாதி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.