கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை-

courts (2)முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை கைதுசெய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. அவர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுமீதான விசாரணை நடைபெறும் வரையிலும் அவரை கைது செய்வதற்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டவிரோதமானது எனவும், தன்னை கைது செய்யாமல் இருக்குமாறும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தான் தாக்கல் செய்த அடிப்படை மனுவில் தெரிவித்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ, கடந்த திங்கட்கிழமை இந்த அடிப்படை மனுவினை தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவின் விசாரணையிலிருந்து நீதியரசர் விலகல்-

aluvihara........முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலனை செய்யும் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அளுவிஹாரே இன்று அறிவித்துள்ளார். தாம் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். நீதியரசர் புவனெக்க அளுவிஹாரே தமது முடிவை பிரதம நீதியரசருக்கு அறிவிக்க வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா இன்று கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும்,, நீதியரசர் சரத் டி ஆப்ரூவுடன் இணைந்து மனுவை தாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதியரசர்கள் குழாமின் தலைவர் ஈவா வனசுந்தர உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லலித் வீரதுங்கவிடம் விசாரணை-

lalith‘ராடா’ நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆழிப்பேரலை வீடமைப்பு செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்காக 2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராடா நிறுவனத்தின் விசேட செயற்றிட்ட அதிகாரி சாலிய விக்கிரமசூரியவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை வி;ளக்கமறியலில் தடுத்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட புவியதிர்வில் 68 பேர் பலி-

nepal quakeநேபாளத்தில் எவரஸ்ட் சிகரத்திற்கு அண்மையில் நேற்று இடம்பெற்ற திடீர் புவியதிர்வின் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய அதிர்வின் பாதிப்புகள் காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, இந்தியாவில் நேற்று 17பேர் வரை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே, இரு வாரங்களுக்கு முன் நேபாளத்தில் இடம்பெற்ற புவியதிர்வினால் 10ஆயிரம் பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்;, குழந்தை உயிரிழப்பு-

wellபுத்தளம் மாவட்டம் சிலாபம் கொஸ்வத்தை பகுதியில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிணற்றினுள் இருந்து காப்பாற்றப்பட்ட தாயும் 7வயது சிறுவனும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். நேற்று நள்ளிரவு குறித்த தாய் தனது இரு பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்துள்ளார். எவ்வாறாயினும் இதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் இராணுவ பிரதானியின் இலங்கை விஜயம் இரத்து-

pakistan...பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜெனரல் ரஹீல் ஷெரிப், இலங்கை விஜயம் இரத்துசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கராச்சியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்தே பாகிஸ்தான் இராணுவ பிரதானியின் இலங்கை விஜயம் இரத்துசெய்யப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் அசிம் சலீம் பஜ்வா தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர், இலங்கைக்கு இன்று மாலை விஜயம் செய்யவிருந்தார்.

மங்களவிடம் மகிந்த 100 கோடி நட்டஈடு கோரல்-

mahinda_rajapakseதனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகத் தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் 100 கோடி நட்டஈடு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனு அனுப்பி வைத்துள்ளார். மஹிந்த தனது சட்டத்தரணி அத்துல பிரியதர்ஷன டி சில்வாவின் ஊடாக இம் மனுவை அனுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வெளிநாடுகளில் 18பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து இருப்பதாக கொழும்பு ஊடக சந்திப்பொன்றில் மங்கள சமரவீர தகவல் வெளியிட்டிருந்தார். இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் இதன்மூலம் தனது கட்சிக்காரரான மஹிந்தவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன் அவர் மனவேதனை அடைந்துள்ளதாகவும் மஹிந்தவின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்வரும் 21ம் திகதிக்கு முன் தனது கட்சிக்காரருக்கு மானநஸ்ட தொகையாக 100கோடியை வழங்குமாறும் அதை செலுத்தாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தரணி அத்துல பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான மனு நிராகரிப்பு-

arjuna mahendranமத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அதன் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக மூன்று நிபுணர்கள் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் இன்று இந்த மனுவை நிராகரித்துள்ளனர். இதேவேளை பொலிஸாரின் தற்போதைய நடவடிக்கை குறித்து பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக பொதுமக்கள் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எனினும் சட்டவிரோதமான எந்தவொரு செயற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பொலிஸ் நிதி மோசடி பிரிவும் முறையான அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மண்மேடு சரிந்து வீழ்ந்து தாயும் குழந்தையும் பலி-

pasaraiபதுளை மாவட்டம் பசறை பிபிலேகம பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக வீடொன்றின்மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்துள்ளது. இரவு 8மணியளவில் கற்பாறை வீழ்ந்தபோது வீட்டுக்குள் இருந்த 2 பெண்களும், 8 மாத குழந்தையும் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 54 வயதான பெண்ணும், 8 மாத குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், 22 வயது பெண் தொடர்ந்தும் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் மற்றும் கடவுச்சீட்டு நூல்கள் அறிமுக விழா-

fgffffயாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் ஜேர்மனி நாட்டில் இருந்து வருகை தந்த ஜீவகுமாரன் அவர்களது ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் மற்றும் கடவுச் சீட்டு ஆகிய நூல்கள் அறிமுக விழா அண்மையில் இடமபெற்றது. இவ் நிகழ்வில் கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திரு தனபாலன், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் திரு. கண்ணதாசன், சின்மயா மிசன் சுவாமிகள் பிரம்மச்சாரி யாக்கிரீட் சைதன்யா உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் வேண்டுகோளின்பேரில் சங்கானையில் மிக அண்மையில் திறக்கப்பட்ட நூலகத்தின் பயன்பாடுகளின் பொருட்டு புதிய கணணி ஒன்றினை ஜேர்மனி நாட்டில் இருந்து வருகை தந்த ஜீவகுமாரன் அவர்கள் வழங்கி வைத்தார்.

nool 01nool 00nool 03nool 02