விழிப்புலன் அற்றோர் துடுப்பாட்ட நிகழ்வு – யாழில் (படங்கள் இணைப்பு)
அண்மையில் யாழ் சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி மைதானத்தில் யாழ் மாவட்ட விழிப்புலன் அற்றோர் சங்கத்திற்கும் கிழக்கு மாகாண விழிப்புலன் அற்றோhர் சங்கத்திற்கும் இடையே துடுப்பாட்ட நிகழ்வு இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் திருமதி. நளாயினி இன்பராஜ் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் உதவிப்பணிப்பளர் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். நிகழ்வில் திருமதி .நாகரஞ்சினி அவர்கள் உரையாற்றும் போது இவ் நிகழ்வில் கலந்து கொண்டமையை இட்டு மட்டற்ற மகிழ்வு அடைகின்றேன். முன்னதாகவே இவ்வாறான நிகழ்வு என அறிந்திருந்தால் இன்னும் பல ஒழுங்குகளை மேற்கொண்டிருக்க முடியும் இருப்பினும் மிகச் சிறப்பாக இவ் நிகழ்வு இடம் பெற்றிருப்பது பாராட்டக்கூடிய ஒர் விடயம் ஆகும். ஒவ்வொரு மனிதர்களும் பல்வேறு இலட்சியங்களை அடைவதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சிக்கின்றனர். இந்த வகையில் இன்று இந்த இடத்தில் நடைபெற்ற இந்த துடுப்பாட்ட நிகழ்வு எம் எல்லோருக்கும் மிகுந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இயலாது என்று எதுவும் இல்லை என்பதனை இன்று இவர்கள் இவ் இடத்தில் எடுத்துக்காட்டி உள்ளனர். இன்று பலரும் ஒரு சிறு இயலாமை அல்லது நோயால் பாதிக்கப்பட்டார்கள் ஆனால் அவர்கள் படுகின்றவேதனை மிக அதிகமாக உள்ள நிலையில் இன்றைய இவ் நிகழ்வு எல்லோருக்கும் முன்மாதிரியான ஒன்றாகவே கொள்ளமுடியும். சுழன்று வரும் பந்தின் ஒசையை செவிமடுத்து அதன் திசையை திருப்பும் இவ் வீரர்களின் திறமை மிக மிக பாராட்டக்கூடிய ஒன்றாகவே கொள்ள முடியும். எதிர்வருங்காலங்களில் இவ்வாறு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு என்னால் ஆன முழுமையன ஒத்துளைப்பை வழங்குவேன் இதற்கும் மேலாக மேலும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள என்றும் ஒத்துளைப்பேன் என கூறினார்.