மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுகள் (படங்கள் இணைப்பு)
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய நாள் முழுவதும் இந்த நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.
வடக்கின் பிரதமான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியிலும் நினைவேந்தலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேரணிக்கே நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மக்களை நினைவுகூர தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்து நிகழ்த்துகின்றது.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவு நகரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.வடக்கு – கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்த நினைவு நிகழ்வினை பொலிசார் தடைசெய்துள்ளனர்
முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் எவ்வாறெனிலும் கடந்த ஆண்டில் கடும் அச்சுறுத்தல்களின் மத்தியில் மக்கள் அஞ்சலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இம்முறை மக்கள் அத்தகைய சூழ்நிலை இல்லை. ஆமைதியான முறையில் ஆபாரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தத்தடையில்லை என அரசு அறிவித்துள்ளது. இதேநேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெறவிருந்த ஊர்வலத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இப்படியான செயற்பாடுகள் நல்லெண்ண செயற்பாடுகள் மற்றும் சமாதான முயற்சிகளுக்கு இடையூறாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.