புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்.

yazl_vithya_02யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த ஆரப்பாட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாடசாலைகளில், மற்றும் யாழ்.நகரப்பகுதியில் மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர்ந்த மற்றய கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
பாடசாலைகளில் மாணவர்கள வீதிக்கு இறங்கி தொடர் ஆர்ப்பாட்டத்தை தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் குடாநாட்டின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கண்டன ஊர்வலம்.- வித்தியாவின் கொலையை கண்டித்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக கொரப்பத்தான வீதியில் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கொரப்பத்தான் வீதியூடாக ஊர்வலமாக பாடசாலையை சென்றடைந்திருந்தனர்
pundudu_manaviசந்தேகநபர்கள் மீது தாக்குதல்:- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அழைத்து சென்றபோது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தாக்கியுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்கஇராணுவத்தின் பிடியில் பாலகுமாரனும், மகனும்.

Balakumaran_CIமுன்னாள் ஈரோஸ் தலைவரும் பின்னாள் புலிகளின் முக்கியஸ்தருமான க.வே.பாலகுமாரனும், அவரது மகனும் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதற்கான புதிய ஆதாரப்புகைப்படமொன்று வெளியாகியுள்ளது. இப் புகைப் படத்தினை பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த படத்தில் பாலகுமாரன் மற்றும் அவரது மகன் தவிர்ந்த இன்னொருவரும் உட்கார்ந்திருக்கிறார். பாலகுமாரனை தாம் கைது செய்யவில்லையென படைத்தரப்பும், இராணுவமும் திரும்பத்திரும்ப கூறிவரும் நிலையில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.

Sri_Lankaஇலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தோ – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள  மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்படக் காரணமாக அமையும்.
இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த புதிய  பூமித் தட்டுப் பகுதி காணப்படுகின்றது. 50 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமித் தட்டுக்கள் நகரத் தொடங்கியுள்ளன. இந்தோ – அவுஸ்திரேலிய  பூமித் தட்டு ஏற்கனவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் மண் சரிவுகள் ஏற்பட இதுவும் ஏதுவாக அமையும்.
நேபாள நிலநடுக்கத்தினால் இந்தியாவிற்குள் அதிர்வுகள் ஏற்பட்டு அது இலங்கையைப் பாதிக்கலாம். எதிர்காலத்தில் இலங்கையில் மண்சரிவு சம்பவங்கள் அதிகரிக்கக் கூடும். இலங்கையில் பூமியதிர்வு ஏற்படாது என நாம் நிம்மதியாக இருக்க முடியாது. ஏனென்றால் கடந்த காலங்களில்  இலங்கையில் பாரியளவு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
1615 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற நிலநடுக்கத்தில் கொழும்பில் 200 பேர் உயிரிழந்ததுடன் பாரியளவில் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு இந்தோ – அவுஸ்திரேலிய பூமியோட்டில் அதிர்வு ஏற்பட்டது.
எதிர்காலத்தில் இலங்கையில் நில நடுக்கம் ஏற்படக் கூடும். நில நடுக்கத்தினை எதிர்நோக்க தற்போது இருந்தே ஆயத்தமாக வேண்டுமென புவியியல் நிபுணர் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குடியேறிகள் வரும் படகுகளை அழிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்?

mediterranean_libyaஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆப்ரிக்க குடியேறிகளின் வருகையால் சர்ச்சை
லிபியாவிலிருந்து குடியேறிகளை ஐரோப்பாவுக்கு கொண்டுவருவதற்கு மனிதக்கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் படகுகளை அழிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின்  கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் அனைவராலும் ஏற்கப்பட்டு அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் முதல்கட்டமாக மனித கடத்தல்காரர்களின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் புலனாய்வு மூலம் திரட்டப்படும். அடுத்தகட்டமாக அவர்களின் படகுகள் சர்வதேச கடற்பரப்பில் குறிவைக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக இத்தகைய இராணுவ நடவடிக்கைகளை லிபிய கடல் எல்லைக்குள்ளும், கடற்கரையோரங்களிலும் கூட மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கான சட்டரீதியிலான அங்கீகாரத்தை அளிக்கவல்ல ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபை தீர்மானம் ஒன்றை கொண்டுவரவும் அவர்கள் முயல்கிறார்கள்.
இந்த ஆண்டில் மட்டும் வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் சுமார் 60,000 பேர் வரை கடல்வழியாக வந்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

ரோஹிஞ்சா முஸ்லீம்களை ஏற்க நாடுகள் தயங்குகின்றன: ஐநா

rohingyaஇந்தோனேசஷிய கடலில் மீட்கப்பட்ட ரோஹிஞ்சா முஸ்லீம்கள் தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கரைகளை நோக்கி கடல்வழியாக வரும் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா குடியேறிகளை, அந்த நாடுகள் ஏற்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளும் இன்னமும் ஏற்க மறுப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடலில் தத்தளிக்கும் இவர்களை காப்பாற்றுவதற்கான நேரம் காலாவதியாகிக்கொண்டிருப்பதாக பாங்காக்கில் உள்ள ஐ நாவின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை பல நூற்றுக்கணக்கான குடியேறிகள், படகுகளில் இந்தோனேசியா வந்தடைந்திருந்தனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பிறகு வேறு எவரும் அங்கே தரையிறங்கியிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியேறிகளை ஏற்றிவரும் படகுகள், அல்லது படகுப் பயணிகள், கடலில் மூழ்கிக்கொண்டிருந்தால் ஒழிய, படகில் வரும் குடியேறிகளுக்கு உதவக்கூடாது என, இந்தோனேசிய அதிகாரிகள் அந்நாட்டு மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
மியன்மார் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து, வறுமை மற்றும் துன்புறுத்தல் காரணமாக வெளியேறுபவர்களே, குடியேறும் நோக்கில் இத்தகைய படகுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒருபடகில் ஏற்பட்ட சணஇடையில் நூறு பேர் வரை கொல்லப்பட்டதாக செய்தி வந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது