Header image alt text

மரண தண்டனையை அமுல்செய்ய நடவடிக்கை-

wijayadasa rajapakseநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் காரணமாக மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தற்போது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு பொதுமக்கள் பாரியளவில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அமுல்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் என்றவகையில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.

மருதானை தீவிபத்தில் ஐவர் உயிரிழப்பு-

burnமருதானை எல்பின்ஸ்டன் திரையரங்குக்கு அருகில் உள்ள வெதுப்பக மொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வாகனங்கள் ஆறு பயன்படுத்தப்பட்டன. சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே தீ, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொத்து ரொட்டி தயாரிப்பதற்காக பயன்படுத்தும் அடுப்புக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் வெடித்ததினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீயையடுத்து கிளம்பிய புகையை உள்ளிழுக்கும் போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்த வெதுப்பகம் 5 மாடிகளை கொண்டது என்றும் ஐந்து மாடிகளுக்கும் தீ பரவியிருந்தது. இந்த வெதுப்பகத்துக்கு முன்பாக இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

வலி மேற்கு முன்பள்ளிகளுக்கு வேள்ட் விசன் நிறுவனம் உதவி-

ainkaranயாழ். வலி மேற்கு பிரதேச சபைக் கலாச்சார மண்டபத்தில் வேள்ட் விசன் நிறுவன அபிவிருத்தி வளவாளர் வி.வெஞ்சஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வேள்ட்விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த 22.05.2015 அன்று வலிகாமம் வலயக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக சங்கானைக் கோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகட்கு சிறுவர் நூல்கள் உள்ளக விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் நிகழ்வில் விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை உதவிப் பிரதேசசெயலர் திருமதி. அ.செந்தூரன், சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்வி. ஏ.எஸ்.மரியாம்பிள்ளை, வலி மேற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி. சாரதா. உருத்திரசாம்பவன், வேள்விசன் முகாமையாளர் திரு.ஐ.மைக்கல், சங்கானை பிரதேசசெயலக உதவித்திட்டமிடல் பணிபபாளர் வீ.சிவகுமார், வலிகாமம் வலய ஆரம்ப முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி. ரூபா உதயரட்ணம், சங்கானை பிரதேச செயலக ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி. சி.ஜெயதுர்க்கா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Read more

சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்றத்தின் 33வது ஆண்டு விழா நிறைவு நாள்-

ssssssssயாழ். சுழிபுரம் பாரதி கலைமண்றத்தின் 33வது ஆண்டு விழா நேற்று (24.05.2015) சுப்பையா அரங்கு வளாகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாரதி கலை மன்ற தலைவர் த.விமல் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் அவர்களும் சங்கானை பிரதேச செயலக கலாச்சார உத்தியேகஸ்தர் திருமதி.நிருபா காசிநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கௌரவ விருந்தினராக சுழிபுரம் மேற்கு ஐக்கிய நாணய சங்கத் தலைவர் திரு.சி.துரைசிங்கம், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பரிபாலன சபை செயலாளர் திரு.வி.சிவராமன், மற்றும் சுழிபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திருமதி. ப.கிருஸ்ணவேணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வின் ஆசியுரையினை சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குரு கமலராஜ் சர்மா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து சிறுவர் நிகழ்வுகள், மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, அறநெறிப்பாடசாலை ஆசிரியர் கௌரவிப்பு, 2015 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா.தர) மாணவர்களுக்காண கௌரவிப்பு, பாரதி கையெழுத்து சஞ்சிகை வெளியீடு, மாணவர்களின் பட்டிமண்றம், மன்ற உறுப்பினர்களின் நாடகம், மற்றும் இன்னிசை நாடகங்கள் மற்றும் விசேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த கலைஞரால் அபிநய நடனம் என பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read more

உயிர்நீத்தோர் நினைவாக வன்னியில் உதவிகள் வழங்கிவைப்பு-

3rd photoபிரான்ஸில் வசிக்கும் தாமோதரம்பிள்ளை வரதராஜா குடும்பத்தினர் கடந்த 1985;ம் ஆண்டு திருகோணமலை பன்குளத்தில் வைத்து காடையர்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது தாய் மற்றும் சகோதரங்களான தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை, தா.பரமேஸ்வரி, தா.புவனேஸ்வரி(மதி), யோகநாதன், ஜெயபாலன் ஆகியோரது 30ஆம் ஆண்டு நினைவாக வன்னியிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். இந்த உதவிகள் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. க.சிவநேசன் (பவன்) அவர்களின் ஊடாக நேற்று(24.05.2015) வழங்கிவைக்கப்பட்டது. இதன்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கு கோழி வளர்ப்பிற்கென 10ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டது. இப்பெண்ணின் கணவர் இன்றுவரை தடுப்புமுகாமில் உள்ளார். மேலும் யுத்தத்தின்போது ஒரு காலினை இழந்து வறுமைக்கோட்டின்கீழ் வாழும் பெண்ணொருவருக்கு தன்னிடமுள்ள பணத்தையும் சேர்த்து மாடு வாங்கி வளர்ப்பதற்காக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயங்காத நிலையிலும் ஒரு கையினை இழந்த நிலையிலும் உள்ள ஒருவருக்கு மாடு வளர்ப்பிற்கென 20ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இவருடைய மனைவி இடுப்பின்கீழ் இயங்காத நிலையில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. Read more