உடுவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா- (படங்கள் இணைப்பு)

uduvil sports  (4)யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2015 ஆனது உடுவில் பிரதேச செயலாளர் திரு. நந்தகோபாலன் அவர்களின் தலைமையில் நேற்று (26.05.2015) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன் மற்றும் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு.பிரகாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பின்னர் போட்டிகளிலே வெற்றியீட்டியவர்களுக்கு கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசில்களை வழங்கினார்கள். இவ்விழாவில் வலிதெற்கு பிரதேச சபை அங்கத்தவர்கள், உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அரச அதிகாரிகள், ஊர்ப் பெரியோர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

uduvil sports  (3) uduvil sports  (1) uduvil sports  (2) uduvil sports  (6) uduvil sports  (5) uduvil sports  (4) uduvil sports  (7)