Header image alt text

ஏழாலை வடக்கில் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

IMG_2110 (1)யாழ். ஏழாலை வடக்கு கிராம முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (28.05.2015) ஏழாலை கிராம முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விக்கினரஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. ஏழாலை வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் லண்டனில் வசிக்கின்ற நல்லதம்பி சற்குணநாதன் தம்பதிகளால் சுயதொழில் முயற்சிக்ககான உதவிகளும், கணனி மற்றும் தையல் வகுப்புக்களுக்கான உதவிகளும் வழங்கப்பட்டன. இதன்கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ்ப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு கோழி வளர்ப்புக்கென கோழிக்கூடு உள்ளிட்டவைகளும், கணினி பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்குரிய கணனிகளும் தையல் பயிற்சி ஏற்பாடுகள் மற்றும் அதற்கான தையல் இயந்திரங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினர்கான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் தவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வினைத் தொடர்ந்து நன்றியுரையினை ஏழாலை வடக்கு கிராம முன்னேற்றக் கழகத்தின் உபதலைவர் திரு வரதராஜன் அவர்கள் ஆற்றினார். இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more

அமைச்சரவைக்கு ஐவர் நியமனம்-

news ministersஅமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவர் என ஐவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

1.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர்
2.பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்.
3. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுற்றாடல்துறை இராஜங்க அமைச்சர்.
4. ஹேமல் குணசேகர-வீடு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர்.
5. சந்திரசிறி சூரியாராச்சி- காணி பிரதியமைச்சர்.

நோர்வே உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

norwayஇலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிறேட் லோசன் இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையங்கள் குறித்து அரச அதிபரிடம் கேள்வி எழுப்பியதுடன், வலி. வடக்கு வரை படத்தினையும் பார்வையிட்டுள்ளார். பின்னர் மாலை 03.00 மணிக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

வடமாகாணத்தில் பொலிஸ{க்கு ஆட்சேர்ப்பு-

police ...வட மாகாணத்தில் நிலவும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக பொலிஸ் உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் கான்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதியவர்களை பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ் திணைக்களத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜயசிங்க தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வட மாகாணத்தில் தற்போது சேவையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை போதாமல் உள்ளது.

Read more

வேள்ட் விசன் உதவியுடன் வலிமேற்கில் நூலகத் திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)

kkkவலி மேற்கு பிரதேசத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தின் உதவியுடன் 10 நூலகங்கள் திறக்கப்பட்டன. இதன்படி அண்மையில் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் இவ் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வின்போது சம்பத் வங்கியினர் குறித்த நூலக பயன்பாட்டிற்கு தளபாடங்களையும் வழங்கினர். இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது இன்று மாணவர்கள் மத்தியில் நூலகஙகளுக்கு சென்று வசிக்கும் நிலை குறைவடைந்து வருவது அவதானிக்க கூடியதாக உள்ளது இவ் நிலையில் ஒர் அதிகரித்த நிலையை உருவாக்கவே இவ்வாறான செயல் திட்டம் முன்வைக்கப்படுகின்றது. இதேவேளை மாணவர்களின் வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க வேண்டிய நிலையை உயர்த்துவதற்கு எல்லோரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

Read more

ஜனாதிபதி அவர்களின் நற்செயலை தமிழர் விடுதலைக் கூட்டணி பாராட்டுகின்றது

werrஅன்போடு வளர்க்கப்பட்டு, பாடசாலைக்குச் சென்ற 17 வயது மாணவி வித்தியா கடத்தப்பட்டு, பலரால் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு, மிருகத்தனமாக முறையில் கொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவியின் வீட்டாருக்கு, சம்பிரதாயங்களை மீறி அமைச்சர்கள் எவரின் உதவியுமின்றி, தன்னந்தனியாக யாழ்ப்பாணம் சென்று, நேரில் தன்சார்பிலும், தன் அரசு சார்பிலும் அனுதாபம் தெரிவித்து வந்த மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் செயற்பாட்டை, வெகுவாக நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். எமது காலத்தில் நடந்தேறிய குற்றச் செயல்களில் அதிகளவிலான, கொடூரமான செயல் இதுவாகும். நாட்டு மக்கள் இன, மத பேதமின்றி சகல துறைகளையும் சேர்ந்தவர்கள், பல்வேறு வயதுடைய ஆண் பெண் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரும் நாடளாவியரீதியில் கிளர்ந்தெழுந்து தமது ஒற்றுமையையும், ஆதங்கத்தையும் இந்த கொடூர செயல்களான கடத்தலோடுகூடிய பலரின் வன்புணர்வு, படுகொலை ஆகியவற்றை பலவகையான செயற்பாடுகள் மூலம் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டினர். இனமத பேதமின்றி, நாட்டவர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டமை, உலக நாடுகளாலேயே நம்ப முடியவில்லை.

Read more

வவுனியா நொச்சிக்குளம் வித்தியாலயத்தில் பெற்றோர் தின விழா-

dfddவவுனியா நொச்சிக்குளம் இல.01 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் பெற்றோர் தின விழா நேற்று (28.05) வித்தியாலய மண்டபத்தில் அதிபர் திரு க.ஜெயகுமார் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் முதன்மை அதிதியாக வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் திரு வ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் இந்நிகழ்வின்போது மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.