ஏழாலை வடக்கில் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

IMG_2110 (1)யாழ். ஏழாலை வடக்கு கிராம முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (28.05.2015) ஏழாலை கிராம முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விக்கினரஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. ஏழாலை வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் லண்டனில் வசிக்கின்ற நல்லதம்பி சற்குணநாதன் தம்பதிகளால் சுயதொழில் முயற்சிக்ககான உதவிகளும், கணனி மற்றும் தையல் வகுப்புக்களுக்கான உதவிகளும் வழங்கப்பட்டன. இதன்கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ்ப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு கோழி வளர்ப்புக்கென கோழிக்கூடு உள்ளிட்டவைகளும், கணினி பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்குரிய கணனிகளும் தையல் பயிற்சி ஏற்பாடுகள் மற்றும் அதற்கான தையல் இயந்திரங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினர்கான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் தவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வினைத் தொடர்ந்து நன்றியுரையினை ஏழாலை வடக்கு கிராம முன்னேற்றக் கழகத்தின் உபதலைவர் திரு வரதராஜன் அவர்கள் ஆற்றினார். இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

IMG_2057IMG_2059IMG_2064IMG_2068IMG_2076IMG_2083IMG_2088IMG_2094IMG_2097IMG_2107 (1)