சங்குவேலி விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான விதைகள் வழங்கல்-
யாழ். சங்குவேலி விவசாய சம்மேளனத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தினை ஆரம்பிப்பதற்காக “நாங்கள்” என்ற அமைப்பு இன்று (30.05.2015) பயிர்ச் செய்கைக்கான விதைகளை விநியோகித்து உதவியுள்ளது. “நாங்கள்” அமைப்பின் செயலாளர் திரு. பிரதாப் மற்றும் அவ் அமைப்பின் அங்கத்தவர் அனுசன் ஆகியோர் பயிர்க்களுக்கான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிவைத்தார்கள். இளைஞர் சம்மேளனத்தின் வட மாவட்டத் தலைவர் திரு. விஜிதரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.